Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 27 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ், செலிங்கோ லைஃப்பின் 43 விற்பனை அதிகாரிகள் குழு அண்மையில் நிதியியல் விற்பனை முகாமைத்துவத்தில் டிப்ளோமாக்களைப் பெற்றது.
நிதியியல் திட்டமிடல், தொடர்பாடல், பகுப்பாய்வு திறன் அபிவிருத்தி, நேர முகாமைத்துவம், நிதியியல் சந்தைகள் மற்றும் வரிவிதிப்பு போன்ற பாடங்களை உள்ளடக்கிய இந்த விசேடத்துவமான டிப்ளோமா பாடநெறியானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விற்பனை ஊழியர்களின் திறன்கள், அறிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதும் முதன்மையான சந்தைகளில் நுழைந்து வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான சேவைகளை வழங்கக்கூடிய மிகவும் திறமையான விற்பனை குழுவினரை விருத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.
ஒன்பது மாத பாடநெறி திட்டத்தில் சமகால பாடநெறிகள், பரீட்சைகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நன்கு முழுமையான கல்வியை உறுதி செய்வதற்கான பணிகள் ஆகியவை அடங்கும்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய செலிங்கோ லைஃப் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான சமித ஹேமசந்திர, நிறுவனமானது அதன் ஆரம்ப காலத்தில் இருந்தே அதன் விற்பனைக்குழு உறுப்பினர்களிடையே தொழில்முறையை வளர்ப்பதற்கும் வெகுமதி அளிப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்றார். 'எமது விற்பனை நிபுணர்களை டிஜிட்டல் கருவிகளால் சித்தப்படுத்துவதில் நாம் முனைப்புடன் இருந்ததுடன், ஆயுள் காப்புறுதி தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்புகளிடமிருந்து தொழில்முறை தகுதிகளைப் பெறவும், மில்லியன் டொலர் வட்ட மேசை உறுப்பினர் தகைமையைப் பெறவும், மற்றும் நிதியியலில் அவர்களின் அறிவை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவித்தோம்,' என்று அவர் கூறினார். 'இதன் விளைவாக, அவர்கள் சமூகம் மற்றும் அவர்களது சகாக்களின் கௌரவத்தைப் பெற்றுள்ளதுடன் மேலும் செலிங்கோ லைஃப் மூலம் நிலையான மற்றும் இலாபகரமான தொழில்சார் நிலைகளை உருவாக்கியுள்ளனர்.'
SLIM தலைவர் பேராசிரியர் ஜெயந்த என். தேவசிறி தெரிவிக்கையில், 'எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழில்சார் திறனை மேம்படுத்துவது SLIM இன் நோக்கங்களில் ஒன்றாகும். இதை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு நாம் தொழில்முறை கல்வியை வழங்குவதுடன் மேலும் தொழில்முறை மேம்பாட்டின் மூலம் அதன் விற்பனை அதிகாரிகளின் தொழில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான செலிங்கோ லைஃப்பின் முயற்சிகளை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது மற்றைய நிறுவனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.'
செலிங்கோ லைஃப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி பட்டமளிப்பு விழாவில் செலிங்கோ லைஃப்பின் சிரேஷ்ட பணிப்பாளர்களான தேவன் கூரே மற்றும் பாலித ஜெயவர்தன, பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரங்க அபேநாயக்க, SLIM கல்வி மற்றும் ஆய்வு துணைத் தலைவர் டாக்டர் தில்ஹான் சம்பத் ஜெயதிலக்க,பிரதம நிறைவேற்றதிகாரி சமில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் 'ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக' தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் 'இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்' என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago