2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஜூலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதம் இலங்கைக்கு 209,351 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததாகவும், இது கடந்த ஆண்டு ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத அதிகரிப்பு எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சியை பதிவு செய்திருந்ததாகவும், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16.7 சதவீதத்தால் அதிகரித்து 1.17 மில்லியனாகப் பதிவாகியிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா திகழ்ந்ததுடன், ஜுலை மாதத்தில் 27665 பேர் வருகை தந்திருந்தனர். முதல் ஏழு மாதங்களில் இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 சதவீதத்தால் அதிகரித்து 200,508 ஆக பதிவாகியிருந்தது.

சீனாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21.9 சதவீதத்தால் அதிகரித்து 30631 ஆக பதிவாகியிருந்தது. முதல் ஏழு மாதங்களில் 37 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்து, 168,473 பேராக பதிவாகியிருந்தது.

ஐரோப்பாவை பொறுத்தமட்டில், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 23948 பேரும், ஜேர்மனியிலிருந்து 10971 பேரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X