2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஜனவரி மாதத்தில் வாகனப் பதிவுகள் சரிவு

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரித்த வாகன வரிகள் மற்றும் லீசிங் வழங்கப்படும் பெறுமதி குறைப்பு போன்ற நடவடிக்கைகளின் காரணமாக ஜனவரி மாதத்தில் பதிவாகியிருந்த வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜே.பி செக்கியுரிட்டீஸ் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மொத்தமாக 2,888 மோட்டர் கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் புத்தம் புதிய கார்களின் பதிவு 1,023ஆக காணப்பட்டது. பயன்படுத்திய கார்களின் பதிவு 1,865 ஆக காணப்பட்டது. இதே வேளை 2015 டிசெம்பர் மாதத்தில் மொத்தமாக 7,181 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 4,940 அலகுகளாக காணப்பட்டது.

மாருதி ரக கார்களின் பதிவுகள் ஜனவரி மாதத்தில் 253 அலகுகளாக பதிவாகியிருந்தன. டிசெம்பர் மாத்தில் 3,883 வாகனங்கள் பதிவாகியிருந்தன. மைக்குரோ பன்டா ரக கார்கள் ஜனவரி மாதத்தில் 414 அலகுகளாக காணப்பட்டன. டிசெம்பர் மாதத்தில் 523 அலகுகளாக பதிவாகியிருந்தது.

பயன்படுத்திய கார்களின் பதிவுகளில் பெருமளவு வீழ்ச்சி காணப்படாத நிலையில், டொயோட்டா கார்கள் பதிவுகள் ஜனவரி மாதத்தில் 709 அலகுகளாக பதிவாகியிருந்தது. சுசூகி கார்களின் பதிவுகள் 673 அலகுகளாக காணப்பட்டது.

அத்துடன் வாகனங்களுக்காக பெற்றுக் கொள்ளப்படும் லீசிங் வசதிகளிலும் வீழ்ச்சி காணப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக இருசக்கர, மூன்று சக்கர மற்றும் பார ஊர்திகள், பயணிகள் வண்டிகள் என சகல விதமான வாகனப் பதிவுகளும் 2015 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வீழ்ச்சியடைந்திருந்ததாக ஜே.பி செக்கியுரிட்டீஸ் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X