Editorial / 2020 ஜூன் 11 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில், லங்கா சதொச உயர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான ஒவ்வொரு மாதமும் 2.5 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான விற்பனைகள் பதிவாகி இருந்ததுடன், ஏப்ரல் மாதத்தில் இந்தப் பெறுமதி, நான்கு பில்லியன் ரூபாயாகப் பதிவாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நிறுவனம் 12.9 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 28 சதவீத அதிகரிப்பாகும். சாதாரணமாக, விற்பனைத் துறையில் 5-6 சதவீத வருடாந்த வளர்ச்சி பதிவாகும் நிலையில், இந்த அதிகரிப்பு விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாக அமைந்துள்ளது. முதல் காலாண்டில், லங்கா சதொச நிகர இலாபம் 95 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து. 1.19 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது என லங்கா சதொச தவிசாளர் நுஷாட் பெரேரா தெரிவித்தார்.
இதன் காரணமாக, நிறுவனம் பதிவு செய்திருந்த இழப்பு ரூ. 991.2 மில்லியனிலிருந்து 57 மில்லியன் ரூபாயாகக் குறைந்ததுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நாட்டில் ஊரடங்கு சட்டம் அமலிலிருந்த போதிலும், 80 சதவீதமான ஊழியர்கள் பணிக்குச் சமூகமளித்திருந்தனர். அத்தியாவசிய சேவை என்பதன் காரணமாக, இந்த உயர் விற்பனைப் பெறுமதிகளை எய்தக் கூடியதாக இருந்தது. நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது முதல், தொடர்ந்து இயங்கிய ஒரே நிறுவனமாக சதொச திகழ்கின்றது.
மேலும், நிதி ஒழுக்க முறை காரணமாக, வருமானத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்தியாவசியமற்ற பொருள்களைக் குறைத்து, அரிசி, பருப்பு, டின் மீன் போன்ற நுகர்வோருக்கு அவசியமான பொருள்கள் விற்பனையில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தது. மரக்கறிகள், பழங்கள் போன்ற விரைவில் பழுதடையும் பொருள்களின் விற்பனை, பெருமளவில் குறைந்திருந்தது. எவ்வேளையிலும் அரிசி, பருப்பு, சோயா மீட், சீனி, பயறு, கௌப்பி போன்ற பொருள்கள் விற்பனைக்கு இருப்பதை, நாம் உறுதி செய்திருந்தோம் என, பெரேரா குறிப்பிட்டார்.
ஊரடங்கு காலப்பகுதியில், சுமார் ஐந்து மில்லியன் பேர் வரை பணிபுரிந்திருந்தனர். இதன் காரணமாக, எம்மால் ஊரடங்கு காலப்பகுதியில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இயங்க முடிந்தது என்றார்.
வாடகை வாகன சேவை வழங்குநருடன் இணைந்து நாம் நுகர்வோரின் இருப்பிடங்களுக்குப் பொருள்களை விநியோகிக்கின்றோம். தினசரி நாம், 800 விநியோகங்களை யாழ்ப்பாணம் முதல் தங்காலை வரை மேற்கொள்கின்றோம். அனைத்து மாவட்டங்களிலும், சுமார் 350,000 விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பெரேரா மேலும் தெரிவித்தார்.
பெப்ரவரி முதல் ஜுன் மாதம் முற்பகுதி வரை, நாம் 14 புதிய விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளோம். தற்போது நிறுவனம் 415,000 விற்பனை நிலையங்களை நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக, மக்களுக்கு அவசியமான பொருள்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு, நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பெரேரா கூறினார்.
42 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago