2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டோக்கியோ சீமெந்து புதிர் போட்டி 3இல் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ சீமெந்து புதிர் போட்டி 3இல், 106 வருடங்கள் வரலாறு கொண்ட யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஏனைய 17 பாடசாலைகளின் மத்தியில் முதலாவதாக வந்து வெற்றியீட்டியுள்ளது.

முதலிடத்தைக் கைப்பற்றிய மகாஜனா அணிக்குப் பொறுப்பான ஆசிரியை செல்வி பி.பத்மலோஜினி கூறுகையில், 'கல்வித்திணைக்களம் நடத்தும் விஞ்ஞான புதிர் போட்டிகளிலும் சமூக விஞ்ஞான புதிர் போட்டிகளிலும் எமது மாணவர்கள் ஆண்டு தோறும் பங்குபற்றுகின்றனர். க.பொ.த (உஃத) பரீட்சையில் பொது அறிவை முக்கிய பகுதியாகக் கொண்ட பொது வினாத்தாளில் சித்தியடைவது பல்கலைகழக அனுமதிக்கு அவசியமாகும். டோக்கியோ சீமெந்து புதிர் போட்டி மாணவர் பொது அறிவை வளர்ப்பதில் பெரிதும் உதவுகிறது.' என்றார்.

யாழ். மாவட்ட வெற்றியாளரான யாஃதெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, 2016 மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அகில இலங்கை டோக்கியோ சீமெந்து புதிர் போட்டி 3 இன் இறுதிச் சுற்றுக்களில் பங்குபற்றவுள்ளது. இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் பாடசாலைகளின் 32 அணிகள் போட்டியிட்டு மோதும் அகில இலங்கை இறுதிச் சுற்றுக்கள் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். வெற்றியீட்டுவோருக்கு 5 மில்லியன் ரூபாய் பரிசுப் பணம் மற்றும் பல பெறுமதியான பரிசுகளையும் உள்ளடக்கிய அகில இலங்கை இறுதிப்போட்டியாக இது நடைபெறும். மடிக் கணினிகள், டெப்லட் கணினிகள் உள்ளிட்ட பல பெறுமதியான பரிசுகள் கடந்தகாலங்களில் அகில இலங்கை இறுதிப்போட்டிகளில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X