2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டைலர்ஸ் கழகத்தின் 1ஆம் வருட பூர்த்தி

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுவர் மற்றும் தரை டைல்கள் உற்பத்தி செய்வதில் முன்னோடிகளாக திகழும் லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா டைல்ஸ் பிஎல்சி ஆகியன தனது டைலர்ஸ் கழகத்தின் 1ஆம் வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியிருந்தன. கொழும்பு தாமரைத் தடாகத்தில் இந்த மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட டைல் பணியாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2014 செப்டெம்பர் மாதத்தில் லங்கா டைல்ஸ் டைலர்ஸ் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. நாடு முழுவதையும் சேர்ந்த 800 பேர் வரை இதில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர். டைல் பணியாளர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கழகமாக இது அமைந்துள்ளது. இந்த ஸ்தாபக நிகழ்வில், டைல் பணியாளர்களுக்கு NFC செயற்படுத்தப்பட்ட அட்டை ஒன்றும் வழங்கப்பட்டிருந்ததுடன், கழகத்துடன் அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்கும் பட்சத்தில் பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1ஆம் வருட பூர்த்தி நிகழ்வில், 20 டைல் பணியாளர்களுக்கு தலா ரூ 100,000 பணத் தொகை போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்ததுடன், 47 டைல் பணியாளர்களுக்கு தலா ரூ 25,000 போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா டைல்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மஹேந்திர ஜயசேகர உரையாற்றுகையில், 'இன்று நாம் எமது நிறுவனத்துக்கு பூரண ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வழங்கிய டைல் பணியாளர்களை பாராட்டுவதுடன் அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கௌரவிக்கின்றோம். அவர்கள் எமது நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் எமது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிகின்றது. இதற்காக நாம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்த சுமூகமான உறவை தொடர திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

லங்கா டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி ஆகியன பரந்தளவு வர்ணங்களிலான டைல்களை உற்பத்தி செய்து வருகின்றன. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் அமைந்துள்ள இந்த டைல்கள் லங்காடைல்ஸ் எனும் வர்த்தக நாமத்தில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டொன்றில் 6.4 மில்லியன் சதுர மீற்றர்கள் எனும் உற்பத்திக் கொள்ளளவை கொண்டுள்ள இந்நிறுவனம், வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆகியோரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் டைல் தெரிவுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உயர் தரமான டைல்கள், வெவ்வேறு கவர்ச்சிகரமான அலங்காரங்களில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அனைத்து உற்பத்திகளும் ISO 9001, ISO 14001, OHSAS 18001, SLS மற்றும் CE தர நியமங்களை பூர்த்தி செய்துள்ளன. சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் வனப்பை பேணுவது தொடர்பில் கம்பனி தொடர்ந்தும் அர்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X