2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டெஸ்லா மோட்டர்ஸின் எதிர்காலம் பற்றி Carmudi ஆய்வு

A.P.Mathan   / 2015 நவம்பர் 04 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு S மொடல் வாகனத்தின் மீதும் 4000 அமெரிக்க டொலர்கள் இழப்பை டெஸ்லா மோட்டர்ஸ் பதிவு செய்வதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையினூடாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது. ஜுன் 30 ஆம் திகதியன்று, 1.15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டும் கையிலுள்ள நிலையில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 2.67 பில்லியன் அமெரிக்க டொலர்களை டெஸ்லா மோட்டர்ஸ் தனது இருப்பாக கொண்டிருந்தது. முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து சில கவனயீர்ப்புகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் உலகளாவிய ரீதியில் இலெக்ரிக் கார்களுக்கான கேள்வி வளர்ச்சி ஆகியன பற்றி ஆராய Carmudi முன்வந்துள்ளது.

47 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிற்படு நட்டமாக பதிவு செய்திருந்த டெஸ்லா மோட்டர்ஸ், 2015 இன் முதல் காலாண்டில் தனது வருமானத்தை 50 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அத்துடன், டெஸ்லா மோட்டர்ஸ் பங்குகளின் பெறுமதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட பெறுமதியை விட 70 சதவீதமாக உயர்வாக பதிவாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் காணப்பட்ட பெறுமதியை விட 8 சதவீத அதிகரிப்பை தற்போது பதிவு செய்துள்ளது. மொடல் S ரக வாகனங்களை உற்பத்தி செய்வது என்பது இலாபகரமானது. எனவே, டெஸ்லா மோட்டர்ஸ் விற்பனை செய்யும் ஒவ்வொரு மொடல் S ரக வாகனத்துக்கும் 4000 அமெரிக்க டொலர்கள் நஷ்டத்தை பதிவு செய்கிறது எனும் தலைப்புகளை ஏன் நாம் பார்க்கிறோம்? 

காலாண்டு பகுதியில் டெஸ்லா மோட்டர்ஸ் விற்பனை செய்த கார்களின் எண்ணி;க்கையை மட்டும் கவனத்தில் கொள்ளும் போது, அது விற்பனை செய்த ஒவ்வொரு S மொடல் மீதும் 4000 அமெரிக்க டொலர்கள் இழப்பை பதிவு செய்துள்ளது என புலப்படுகிறது. ஆனாலும், 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது, S மொடல் வாகனங்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும் மட்டும் செலவிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெஸ்லா நிறுவனம் தற்போதும் ஆரம்ப நிலையில் காணப்படும் ஒரு ஸ்தாபனம் என்பதுடன், இந்த 47 மில்லியன் அமெரிக்க டொலர்களும் நிறுவனத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உலகளாவிய ரீதியில் இலெக்ரிக் வாகனங்களுக்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் டெஸ்லா மோட்டர்ஸின் எதிர்காலம்:

டெஸ்லா மோட்டர்ஸ் மற்றும் இதர இலெக்ரிக் கார் உற்பத்தியாளர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த கேள்வியை அவதானிக்க முடிவதில்லை. வளர்ந்து வரும் சந்தைகள் இந்த வர்த்தக நாமத்துக்கு மாபெரும் வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். மத்தியளவு வகுப்பு பிரிவின் வளர்ச்சி காரணமாக, அதிகளவு நிலையாண்மையுடன் கூடிய மோட்டார் வாகன ஆர்வலர்கள் பாரம்பரிய எரிபொருள் வாகனங்களிலிருந்து, சொகுசான இலெக்ரிக் வலுவில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு மாறுவார்கள். இதில் டெஸ்லாவின் S மொடலும் அடங்கியுள்ளது.

சர்வதேச இலெக்ரிக் வாகன சந்தை 2019 இல் 271.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 64.4 மில்லியன் அலகுகள் வரை விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாகனத்துறையில் இலெக்ரிக் கார்கள் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் டெஸ்லா உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கம்பனி இந்த ஆண்டில் செலவிட்டு, மொடல் X ஐ அறிமுகம் செய்யவுள்ளது. பற்றரியில் இயங்கும் இந்த கார், சூழலுக்கு நட்புறவான ஸ்போர்ட்ஸ் ரக வாகனம் என்பதுடன், batmobile போன்ற கதவுகளை கொண்டிருக்கும்.

'Carmudiஇல் பதிவு செய்யப்பட்டுள்ள சூழலுக்கு பாதுகாப்பான வாகனங்கள் ஹைபிரிட் வாகனங்களாக அமைந்துள்ளன. அத்துடன், இவற்றில் பெருமளவான வாகனங்கள் ஆசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 90சதவீதத்துக்கு அதிகமானதாகும்' என Carmudi ஸ்ரீலங்கா முகாமைத்துவ பணிப்பாளர் ஃபிராஸ் மார்கார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'இலங்கையில் நாம் இலெக்ரிக் வாகனங்களுக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. Nissan Leaf ரக வாகனத்தின் அறிமுகத்துடன், இந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து BMW i3 மற்றும் டெஸ்லா ரக வாகனங்கள் இறக்குமதியாகின்றன. இந்த இரு வாகனங்களும் leaf ஐ விட அதிக விலையில் காணப்படுகின்றன. இலங்கையில் இலெக்ரிக் வாகனங்கள் பெற்றோல் வாகனங்களை விட மிகவும் போட்டிகரத்தன்மையான விலையில் அமைந்துள்ளன. இதற்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டமை முக்கிய காரணமாகும். தொடர்ந்தும் இலெக்ரிக் கார்களின் விலை உயர்வடையும் என நாம் எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் பல வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X