2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டயர் விநியோகஸ்த்தர்களுக்கு AMW இனால் 'வியாபார செயலமர்வு'

A.P.Mathan   / 2015 நவம்பர் 02 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான AMW, தனது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெவ்வேறு டயர்களான Acemax 155x12 tyres, Epic Farmax 600x12 tyres மற்றும் heavy duty tyre flaps விநியோகஸ்த்தர்களுக்காக 'வியாபார செயலமர்வு' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மவுன்ட்லேவ்னியா ஹோட்டலில் இடம்பெற்ற இரு நாள் செயலமர்வில் AMW இன் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர கலந்து கொண்டிருந்தார். AMW இன் டயர் விநியோகஸ்த்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்ததுடன், அவர்களின் குடும்பத்தாரும் சமூகமளித்திருந்தனர். 

இந்த வணிக கருத்தரங்கின் மூலமாக, புத்தாக்கமான வியாபார கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், போட்டியாளர்களின் சவால்களை எதிர்நோக்கி அவற்றை வெற்றி கொள்வது பற்றிய குறிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றன AMW இனால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வினூடாக, AMWஇன் டயர் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு டயர் விநியோகஸ்த்தர்களுடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. உற்பத்தியின் போது தாம் எதிர்கொள்ளும் பாரிய சவால்கள் பற்றியும், விற்பனையில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடியிருந்ததுடன், புத்தாக்கமான ஊக்குவிப்பு மற்றும் விற்பனை நுட்பங்கள் பற்றியும் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட AMW இன் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர. கருத்து தெரிவிக்கையில், 'புத்தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் நிறுவனத்துடன், கைகோர்த்து செயலாற்றும் ஊழியர்களின் நலன் கருதி இந்த 'வியாபார செயலமர்வு' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.' 

'அதாவது, AMW இன் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்த்தர்கள் எனும் வகையில், உங்கள் வியாபாரத்தின் வெற்றி உறுதி செய்யப்படும். எமது நிறுவனம், புத்தாக்கமான புதிய தயாரிப்புகளை எதிர்வரும் காலப்பகுதியில் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. உயர் தரம் வாய்ந்த டயர்களை அறிமுகம் செய்வதற்காக நாம் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளோம். இதன் பெறுபேறாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளடங்கலாக 15 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. AMW முச்சக்கர வண்டி டயர் என்பது இந்த ஏற்றுமதியில் உள்ளடங்கியுள்ள ஒரு வகை டயராகும். உலகப் புகழ்பெற்ற சில முச்சக்கர வண்டி டயர் உற்பத்தியாளர்கள் தமது டயர்களை எமது AMW உற்பத்தி தொழிற்சாலையில் தயாரித்து தமது வர்த்தக நாமங்களை பதிக்கின்றனர். எமது விநியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, எம்முடன் உங்களையும் கைகோர்க்குமாறு நாம் அழைக்கிறோம்' என்றார்.

AMWஇன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ்.ரத்நாயக்க கருத்து தெரிவிக்கும் போது, விநியோகஸ்த்தர்கள் கம்பனியின் வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருந்தார்கள். இந்த வணிக கருத்தரங்களை ஏற்பாடு செய்வதன் முக்கிய இலக்கு, அவர்களின் சேவைகளை கௌரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்றார்.

'இந்த வணிக கருத்தரங்கு, விநியோகஸ்தர்களின் செயற்பாடுகளின் புதிய உள்ளம்சங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விநியோகஸ்த்தர்களுக்கு ஏனைய விநியோக முகவர்கள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. டயர் விநியோகத்தில் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடு எமது நிறுவனத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே, நாம் அவர்களுக்கு புதிய வியாபார நுட்பங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், அவர்களின் கருத்துக்களை வெளிக்கொணர ஊக்குவித்திருந்தோம். எமது உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு விநியோக முகவருடனும் விற்பனை வாய்ப்புகள், கொள்வனவாளர்கள் எதிர்பார்க்கும் பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் பற்றிய விடயங்கள் பற்றி பேசியிருந்தனர். அவர்களிடமிருந்து மிகவும் ஆச்சரியமூட்டும் பதில் கிடைத்திருந்தது. எமது சகல விநியோகஸ்த்தர்களுக்கும் தமது குடும்பத்தாருடன் இரு நாட்கள் மகிழ்ச்சிகரமாக செலவிட வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எனவே, இந்த கருத்தரங்கின் மூலமாக விநியோகஸ்த்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடையே சுமூகமாக உறவை ஏற்படுத்தப்பட்டிருந்தது' என்றார்.

AMWஇன் வெவ்வேறு டயர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் சிரேஷ்ட முகாமையாளர் ரஞ்சன் காரியவசம் கருத்துத் தெரிவிக்கையில், 'கம்பனியின் உற்பத்தி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகஸ்த்தர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்த இந்த செயலமர்வு உதவியாக அமைந்துள்ளதால், மிகவும் பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. சிந்தனைகளை பரிமாறிக் கொள்ள இந்த செயலமர்வு வாய்ப்பாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்க உதவியாகவும் உள்ளது. எமது விநியோகஸ்த்தர்களின் கருத்துக்களும் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன' என்றார்.

AMW பல்வேறு டயர்கள் உற்பத்தியில் produces EPIC TRIMAX, EPIC POWERMAX, Hi-Miller முச்சக்கர வண்டி டயர் வர்த்தக நாமம் மற்றும் EPIC ACEMAX 155x12, EPIC FARMAX 600x12, SOLIMAX உறுதியான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

DAG டயர் வர்த்தக நாமங்களான Marathon DAG, Marathon Radial, Marathon Hi-Miler, OTR மற்றும் aDAG ஆகியவற்றை AMW உற்பத்தி செய்கின்றது. மேலும், எந்தவொரு Rim அளவுகளுக்கும் ஏற்ப ரயர்களை மீள் நிரப்பும் இயலுமையை கம்பனி கொண்டுள்ளது. பாரம்பரிய மீள் நிரப்பும் முறைகளான Vacu-lug மற்றும் Die-Hard ஆகியவற்றுக்கமைய டயர்களை மீள் நிரப்பும் இயலுமையைக் கொண்ட ஒரே நிறுவனமாக AMW திகழ்கிறது.

களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் இரு மாபெரும் தொழிற்சாலைகளை AMW கொண்டுள்ளது. AMW இன் சகல உற்பத்திகளுக்கும் ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவை ISO 9001-2008 தரச்சான்றிதழையும், சூழல் பாதுகாப்புக்கான ISO 14001-2004 தரச்சான்றையும் பெற்றுள்ளது.

அசோஸியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) நிறுவனத்தை சேர் சிரில் டி சொய்சா அவர்கள் ஸ்தாபித்திருந்தார். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. டயர்கள் மீள்நிரப்பும் வியாபாரத்தை முதன் முதலில் ஆரம்பித்த நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மாபெரும் பல்தேசிய நிறுவனமான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் Al Futa Im நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமாக AMW இயங்குகிறது. வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள், காப்புறுதி, சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறையில் Al Futa Im தனது வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X