Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பாற் பண்ணை உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்தி திறன், உற்பத்தி செய்யப்படும் பாலின் தரம், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவதற்காக “சவிய” எனும் மொபைல் சார்ந்த ஆலோசனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க விவசாய திணைக்களத்தின் உணவுக்கான முன்னேற்றத்தின் முன்முயற்சியால் நிதியளிக்கப்பட்ட சந்தை சார்ந்த பால் (MOD) திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையின் பால் துறையில் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச நிர்வாக சேவை Corps (IESC) உடன் இணைந்து இந்தச் சேவை வழங்கப்படுகின்றது. இது வேளாண்மை முன்னேற்றத்துக்கான உணவு முயற்சியாகவும் காணப்படுகின்றது.
இலங்கை கால் நடைத் தொழிலில் பால்வளத்தின் முக்கியத்துவம் இருந்த போதிலும் வளர்ந்து வரும் உள்ளூரின் பால் தேவையில் 30-40% ஐ மட்டுமே நாடு பூர்த்தி செய்கின்றது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காக 5,000க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளின் திறனினை மேம்படுத்துவதை MOD பிரதான நோக்கமாக கொண்டிருந்தாலும் தொடர்புடைய தகவல்களை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது 332,335 விவசாயிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
சந்தை சார்ந்த பால் நிறுவன தினத்தில் தயாரிப்பின் முதல் மாதிரி வெளியீடானது கடந்த ஆண்டு ஜுலை மாதம் அனுராதபுரத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்ச்சியில் 800 க்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் கலந்துக் கொண்டார்கள்.
விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்காகவும் அவர்களின் தனிப்பட்ட பயிர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள உழவர் தோழன் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான டயலொக் இன் சேவைகளில் “சவிய” உம் இணைந்துக்கொள்கின்றது. 600,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுடன் 20 பயிர்களைக் கொண்ட உழவர் தோழன் சேவையானது, இலங்கையின் மிகப்பெரிய மொபைல் விவசாய சேவையாகும். உள்ளடக்கப் பங்காளிகளின் வேளாண்மை அமைச்சின் கீழ் உள்ள வேளாண்மைத் துறையும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தொழிற்றுறை தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்தின் சுகாதாரம், ஊட்டச்சத்து, சுதேச மருத்துவ அமைச்சுடன் இணைந்து குடும்ப ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்குகின்றது.
டயலொக் வாடிக்கையாளர்கள் உழவர் தோழன் அல்லது சவிய சேவைகளை பதிவு செய்துக்கொள்வதன் மூலம் தினசரி 1 ரூபாய், வரிகளுக்கு எந்தவொரு பயிருக்குமான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். உழவர் தோழன் அல்லது சவிய அல்லது இரண்டுக்கும் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டயலொக் கையடக்க தொலைபேசியில் இருநது 616 க்கு அழைத்து அவர்களுக்கு பொருத்தமான மொழியைப் பதிவு செய்துக்கொள்ள முடியும். 6162 க்கு அழைப்பதன் மூலமும் சவிய சேவையினை நேரடியாக அணுகிட முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
26 minute ago
1 hours ago