Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாராந்தம் ரூ. 1 கோடி பணப்பரிசை வெற்றியீட்டும் வாய்ப்பை வழங்கும் Dialog Mega அதிர்ஷ்டத்தினூடாக கடந்த டிசெம்பர் மாதம், முதல் தடவையாக அதிர்ஷ்டசாலி ஒருவர் ரூ. 2 கோடியை வெற்றியீட்டியுள்ளதாக Dialog அக்ஸியாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரையில், இலங்கையில் தொலைபேசி நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ள பெருந்தொகை பணப்பரிசாக இதுவரலாறு படைத்துள்ளது. மேலும், கொழும்பு Dialog தலைமையகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தின்போது, இன்னுமொரு விசேட நிகழ்வும் இடம்பெற்றது.
அதாவது, Dialog அதிர்ஷ்டத்தின் ஊடாக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பங்களிப்பைச் செலுத்திய விற்பனையாளர்களைப் பாராட்டும் விதமாகவும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் அவர்களுக்குத் தலா இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசும் நினைவுப் பரிசில்களும் அங்கு வழங்கப்பட்டன.
இலங்கையின் தொலைபேசி நிறுவனமொன்றினால் தமது விற்பனையாளர்களை இவ்வாறு மதித்துப் பாராட்டி ஊக்குவித்தமையானது ஓர் அரிய நிகழ்வாகும் என்பதுடன் Dialog நிறுவனம், அதற்கு முன்னோடியாக இருந்துள்ளமையும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
Dialog Mega அதிர்ஷ்டத்தின் ஊடாக, மாதாந்தம் வெல்லக்கூடிய ஒட்டுமொத்த பணப்பரிசு ரூபா 5 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தப் பெருந்தொகை வெற்றிப் பொதியை வெல்லும் வாய்ப்பானது 12 மில்லியனைத் தாண்டியுள்ள Dialog வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே உரித்துடையதாகும்.
தமது வாடிக்கையாளர்களை வலுவடையச் செய்து, அதிக எண்ணிக்கையான இலங்கையர்களுக்கு அதிர்ஷ்டத்தை எட்டச்செய்வதே Dialog நிறுவனத்தின் குறிக்கோளாகும். இந்தக் குறிக்கோளை முன்னிறுத்தி ரூ. 2 கோடி அதிர்ஷ்டசாலி மட்டுமன்றி மேலும் 1 கோடியை வெல்லும் 12 வெற்றியாளர்கள், ரூ. 30 இலட்சத்தை வெல்லும் ஒரு வெற்றியாளர், ரூ. 20 இலட்சத்தை வெல்லும் 8 வெற்றியாளர்கள், ரூ. 10 இலட்சத்தை வெல்லும் 117 வெற்றியாளர்கள் மற்றும் ரூ. 1 இலட்சத்தை வெல்லும் 720 பேர் உட்பட 17 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்தளவு பெருந்தொகைப் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Dialog Mega அதிர்ஷ்டம் கடந்த வருட நத்தார் வாரத்தின் போது, சகல பணப்பரிசுத் தொகையையும் இரண்டு மடங்காக்கியதுடன் அதற்கிணங்க ரூ. 1 கோடி முதலாம் பரிசானது ரூ. 2 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
இவ்வாறு இரட்டிப்பாக்கப்பட்ட பெருந்தொகைப் பணப்பரிசை வெற்றிக்கொள்ளும் முதலாவது அதிர்ஷ்டசாலியாகத் தெரிவாகியவர் பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த தரங்க பெர்ணான்டோ என்பவராவார். இவர் தனது மனைவியுடன் இணைந்து, ஆடைத்தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
3 minute ago
38 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
38 minute ago
40 minute ago