Freelancer / 2025 ஜூலை 18 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, டொயோட்டா பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் லீசிங்கினை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் புதுமையான லீசிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய பங்குடைமையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியானது இந்த ஒத்துழைப்பின் கீழ், டொயோட்டா வாகனங்களுக்கான லீசிங் வசதிகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதை நீடித்துள்ளது. இதில் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், முன்னுரிமை வீதங்களில் எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்ட காலத்திள், மற்றும் இந்த லீசிங் வசதிகள் தொடர்பாக வங்கியால் வழங்கப்பட்ட கடனட்டைகளுக்கு இரண்டு வருட வருடாந்த கட்டணத் தள்ளுபடியுடன் இணைப்புக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல் ஆகியவை அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் டொயோட்டா லங்காவானது இலவச வாகனப் பதிவு, முதல் மூன்று நிலையான சேவைகள் மற்றும் மூன்று ஆண்டுகளை உள்ளடக்கிய அல்லது 100,000 கிலோமீட்டர்களை உள்ளடக்கிய உத்தரவாதத்தை வழங்கும் - இதில் எது முதலில் நிகழ்கிறதோ அது இதில் உள்ளடக்கப்படும்.
இந்த விசேட லீசிங் ஊக்குவிப்பானது கொமர்ஷல் வங்கியின் விரிவான கிளை வலையமைப்பு மூலம் நாடு முழுவதும் நடத்தப்படுவதுடன் மேலும் இது டிசம்பர் 31, 2025 வரை செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் முழு அளவிலான டொயோட்டா பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களிலிருந்து விரும்பியதை தெரிவு செய்யலாம். மேலும் தனிப்பட்ட வருமான முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட மீளச் செலுத்தும் தெரிவுகள் மூலமும் பயனடையலாம்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100மூ கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026