2025 மே 21, புதன்கிழமை

டோக்கியோ சீமெந்தின் கருத்தரங்குகள்

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் நிர்மாணத்துறையை கட்டியெழுப்பும் தனது முயற்சியின் மற்றுமோர் அங்கமாக, மேசன்மாரின் திறன்களைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுத்திருந்தது.

சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, கட்டடத் துறையில் வலுவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிறுவனம் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. 

இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த மேசன்மாரின் திறன்களைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில், திறன் கட்டியெழுப்பும் கருத்தரங்குகள் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், நிர்மாணத்துறையைச் சேர்ந்த சிறந்த செயன்முறைகள் மற்றும் நிபுணத்துவ வழிகாட்டல்கள் போன்றன அவர்களுடன் பகிரப்பட்டிருந்தன.  

மஹியங்கனை, மட்டக்களப்பு, கல்முனை, எம்பிலிபிட்டிய, பொல்கஹாவெல, முல்லைத்தீவு, சிலாபம், ரிக்கில்லகஸ்கட மற்றும் வெலிமட ஆகிய நகரங்களில் மேசன்மாருக்கான கருத்தரங்குகளை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் முன்னெடுத்திருந்தது.  

டோக்கியோ சீமெந்து குழுத்தின் பொறியியல் ஆலோசகரான பொறியியலாளர் மேளலி குணரத்ன, இந்த நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்திருந்தார். இவருக்குக் குறித்த பிரதேசதங்களைச் சேர்ந்த விற்பனை செயலணிகள் உதவிகளை வழங்கியிருந்தன.  

இந்தக் கருத்தரங்குகள் அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி விடயங்களை உள்ளடக்கியிருந்தன. நிர்மாணச் செயற்பாடுகளில் புதிய செயன்முறைகள் மற்றும் புதிய தயாரிப்புகளின் பாவனை போன்றன இவற்றில் அடங்கியிருந்தன. மேசன்மாரின் திறன் விருத்தியை மேற்கொள்வது, அவர்களின் அறிவைக் கட்டியெழுப்புவது என்பவற்றுக்கு மேலாக, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தால் பொறியியலாளர்கள், பொது மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களின் நிர்மாண செயன்முறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் அடங்கியிருந்தன. 

மேலும், இந்தக் கருத்தரங்குகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டிருந்ததுடன், நிர்மாணம், புத்தாக்கமான செயன்முறைகள், சீமெந்துப் பாவனை, கொங்கிறீற் மற்றும் சீமெந்து அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் போன்றவற்றில் நிபுணர்களின் அறிவு மேம்படுத்தல் செயற்பாடுகள் குறித்தும் இந்தக் கருத்தரங்குகளின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தன.  

நாடளாவிய ரீதியில் இந்தத் திறன் விருத்திக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தமைக்கு மேலாக, நிறுவனத்தால் ‘ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகம்’ தம்புளையில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாகத் திறன் படைத்த மற்றும் திறன் படைக்காத மேசன்மாருக்கு NVQ சான்றிதழை பெற்றுக் கொடுப்பதற்கு வதிவிடப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் முதல்த்தர சீமெந்து மற்றும் கொங்கிறீற் தயாரிப்புகள் விநியோகஸ்தர் எனும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமம், உள்நாட்டு நிர்மாணத்துறையின் நிபுணத்துவத் தரத்தை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X