2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

த ஃபினான்ஸ் கம்பனியின் நிதிச் சேவைகளை வழங்கும் அனுமதி இரத்து

Editorial   / 2020 மே 31 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

த ஃபினான்ஸ் கம்பனியின் நிதிச் சேவைகளை வழங்கும் வியாபார அனுமதியை, இலங்கை மத்திய வங்கி இரத்துச் செய்துள்ளது.

இதன் பிரகாரம்,  வியாழக்கிழமை (21) முதல் த ஃபினான்ஸ் கம்பனி, எவ்விதமான வியாபாரச் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது.

2019 ஒக்டோபர் 23ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் வெளியிடப்பட்டிருந்த இரத்துச் செய்தல் தொடர்பான அறிவித்தலின் பிரகாரம், நிறுவனத்தின் செயற்பாடுகளை மீளமைப்பது, புதிய முதலீட்டாளர்களை இனங்காண்பது தொடர்பான சகல மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சகல வாடிக்கையாளர்கள், பங்காளர்களைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கியால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக, நிறுவனத்திடமிருந்து தமது வைப்புப் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை, வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

இலங்கை மத்திய வங்கியின், இலங்கை வைப்பு காப்புறுதி மற்றும், திரள்வு உதவித் திட்டத்தின் பிரகாரம், காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு நட்டஈடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், நிறுவனத்தின் மொத்த வைப்பாளர்களில் 93 சதவீதமானவர்களுக்கு முழுமையான கொடுப்பனவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். நிறுவனத்தில், மொத்தமாக 145,172 வைப்பாளர்கள் காணப்படுவதுடன், இதில்  135,100 வைப்பாளர்களுக்கு முழுமையான நட்டஈட்டை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், எஞ்சிய ஏழு சதவீதமான வைப்பாளர்களுக்கு ரூ. 600,000 தொகை அவர்களின் வைப்புத் தொகையின் பகுதிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்பதுடன், எஞ்சிய தொகை திரள்வின் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X