2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தேசிய உற்பத்தி அதிகரிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு, புள்ளி விவரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   

இதற்கமைய நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2,130,240 ஆக பதிவாகியிருந்ததுடன், இந்தப் பெறுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,075,805 ஆக பதிவாகியிருந்தது.   

விவசாயம், தொழிற்துறை, சேவைகள் மற்றும் வரிகள் இல்லாத உற்பத்திப்பொருட்கள் போன்றன நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பில் பங்களிப்பு வழங்கியிருந்தன. இவை முறையே 7.7, 26.6, 55.8 மற்றும் 9.8 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன.  

இரண்டாம் காலாண்டு பகுதியில் தொலைத்தொடர்பாடல் சேவைகள் என்பது 21.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், நிதிச்சேவைகள் 14.5 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. காப்புறுதிச்சேவைகள் 15.1 சதவீதம், கல்விச்சேவைகள் 10.5 சதவீதம் மற்றும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் என்பது 3.5 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தன.   

பெறுமதி சேர்க்கப்பட்ட செய்கைகளான அரிசி, தேயிலை மற்றும் இறப்பர் ஆகியன 17.9 சதவீதம், 12.2 சதவீதம் மற்றும் 8.2 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X