2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசிய புரோட்பான்ட் ஒன்றுகூடல்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“A Better Connected Sri Lanka” என்ற தொனிப்பொருளில் முதல் முறையாக நாட்டில் இடம்பெறுகின்ற இலங்கை தேசிய புரோட்பான்ட் ஒன்றுகூடல் நிகழ்வு, தொலைதொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு ஆகியனவற்றால், Huawei இன் இணை ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்றது.

ஒரு தொழிற்துறை சார்ந்த கலந்துரையாடல் களமாக இந்த ஒன்றுகூடல் நிகழ்வு அமைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் சிரேஷ;ட கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு தொழிற்பாட்டாளர்கள், சேவை வழங்கல் தொழிற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறையினர் என அனைத்து தரப்பினரையும் ஒன்றுதிரட்டி, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பாகமாகக் காணப்படுகின்ற புரோட்பான்ட் தொழில்நுட்பத்தை விஸ்தரிப்பதற்கு அனுசரணையளிக்கும் வேலைத்திட்டமொன்றை தமக்கிடையில் பகிர்ந்துகொண்டனர்.    

இந்த அரை நாள் நிகழ்வில், தொலைதொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் சர்வதேச அளவில் முன்னிலை வகித்துவருகின்ற Huawei, Ovum, iFlix மற்றும் உள்நாட்டிலுள்ள பிரதான தொலைதொடர்பாடல் தொழிற்பாட்டு நிறுவனங்களிலிருந்து பிரபலமான பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.  

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான வாங் ஷன்லி தமது நிறுவனம் நாட்டின் தொலைதொடர்பாடல் துறைக்கு தற்போது வழங்கிவருகின்ற ஆதரவையும், இலங்கையில் தமது தொழிற்பாடுகளின் 10 ஆண்டுகள் பூர்த்தியையும் சுட்டிக்காட்டினார்.  

டிஜிட்டல் ரீதியாக திறன்கொண்ட, வலுவூட்டப்பட்ட சமூகத்தைத் தோற்றுவிக்கும் மாற்றத்திற்கான பயணத்தில் இலங்கை தற்போது காலடியெடுத்து வைத்துள்ள நிலையில், இதைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான நிலையான-புரோட்பான்ட் தளத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் பரந்த அளவில் ஒப்பிடுகையில் இலங்கையில் நிலையான-புரோட்பான்ட் அடைவு மட்டம் ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட 10 நாடுகள் மத்தியில் 5ஆவது ஸ்தானத்தில் அது திகழ்வதாகவும் Ovum மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

DSL மற்றும் FTTH அடைவு மட்டங்கள் உயர்ந்த வீதத்தில் காணப்படுகின்ற மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற முன்னணி சந்தைகளுக்கு இணையாக முன்னேறுவதை நோக்கி இலங்கை பயணித்து வருகின்றது. குடும்பங்கள் மத்தியில் நிலையான-புரோட்பான்ட் அடைவு மட்டம் தொடர்ந்தும் குறைவாக உள்ளதுடன், 2015ஆம் ஆண்டின் முடிவில் இது 10.3மூ ஆகக் காணப்பட்டது. குறைந்த அளவிலான குடும்பங்களை உள்ளடக்கிய அடைவுமட்டம் மற்றும் உறுதியான குவுவுர் சந்தையின்மை ஆகியன நாட்டில் சராசரி பதிவிறக்க கதி தாழ்ந்த மட்டத்தில் காணப்படுவதுடன் தொடர்புபட்டுள்ளன.       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X