Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தென் பகுதியில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மத்தியில் தொழிற்சார் பண்பினை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு விஷேட செயலமர்வு ஒன்றை கொமர்ஷல் வங்கி அண்மையில் நடத்தியது. நாடு முழுவதும் உள்ள நுண் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் ஆற்றல்களையும் அறிவையும் மேம்படுத்தும் வங்கியின் பிரத்தியேக திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.
வங்கியின் திஸ்ஸமஹாராம கிளையின் விவசாய மற்றும் நுண்நிதி பிரிவு (AMFU) இதனை ஏற்பாடு செய்திருந்தது. அம்பலாந்தோட்டை, ஹம்பாநதோட்டை, திஸ்ஸமஹாராம கிளைகளின் ஆதரவோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றதன் மூலம் 40 அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள குறைந்த வளங்களுடன் தமது ஆலைகளை எப்படி அபிவிருத்தி செய்து கொள்வது என்ற அறிவை பெற்றுக் கொண்டனர். இலங்கை மத்திய வங்கி, இறைவரி திணைக்களம், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் நிலையம் என்பனவற்றின் ஒத்துழைப்போடு இந்நிகிழ்வு இடம் பெற்றது.
நிதி முகாமைத்துவம், முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் இருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதில் உள்ள வித்தியாசம், சட்டபூர்வமான கேள்விமனு கோரல் குறிப்புக்களை எப்படி இனம் காண்பது, மத்திய வங்கியின் கடன் திட்டங்கள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பண்புகள் உட்பட நிதி அறிவு அபிவிருத்தி தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய விளக்க உரைகளை மத்திய வங்கி அதிகாரிகள் வழங்கினர்.
பயிர்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டியதன் முக்கியத்துவம், பயிர்களை பாதுகாப்;பதற்கான நவீன வழிமுறைகள், அறுவடைக்குப் பிந்திய செலவுகளை எப்படி குறைத்தல், இலாபத்தை எவ்வாறு அதிகரித்தல் மற்றும் நவீன இயந்திர வகைகள் என்பன தொடர்பான விளக்கங்கள் அடங்கிய தெளிவுரைகளை அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிலையத்தின் அதிகாரிகள் வழங்கினர்.
திருமதி.ஸ்ரீமெவன் பண்டார வாசல - தென் பிராந்தியத்துக்கான கொமர்ஷல் வங்கி பிராந்திய முகாமையாளர், உபாலி ஹெட்டிஆரச்சி - மத்திய வங்கி மாத்தறை பிரிவு பிராந்திய முகாமையாளர், எச்.எம்.கே.பி.ரட்ணாயக்க - அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவன சிரேஷ்ட பொறியியலாளர், ஏ.கமகே சோமபால - உள்நாட்டு இறைவரி திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் கபில தனசிறி - சாதகமான சிந்தனைகள் பற்றிய விரிவுரையாளர் ஆகியோரும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பு விரிவுரைகளை வழங்கினர்.
நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான இத்தகைய செயல் அமர்வுகளை வங்கி ஏற்கனவே நாரம்மல, காலி, மொனராகலை, வெள்ளவாய, பதுளை, பசறை, பண்டாரவலை, வெலிமடை, வெலிகம, கொக்கலை, கராப்பிட்டிய, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா, ஹிங்குராக்கொடை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஏற்கனவே அண்மைக் காலங்களில் நடத்தியுள்ளது.
வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதி சேவைப் பிரிவுகள் இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவலை, வெள்ளவாய, ஹிங்குராக்கொட, கலேவல, அச்சுவேலி, வவுனியா மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. புதிய வர்த்தக முயற்சிகளைத் தொடங்க அல்லது இருக்கின்ற வர்த்தகத்தை விஸ்தரிக்க உதவி தேவைப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு இந்தப் பிரிவுகள் உதவி வருகின்றன. தமது வர்த்தகத்தை எவ்வாறு விருத்தி செய்வது அல்லது எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பன போன்ற விடயங்களிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
21 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago