2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தீபாவளி தினத்தில் கொமர்ஷல் வங்கியின் 65 கிளைகள் திறந்திருக்கும்

A.P.Mathan   / 2015 நவம்பர் 08 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மற்றும் வங்கி விடுமுறை தினமான நவம்பர் பத்தாம் திகதி தீபாவளி தினத்தன்று கொமர்ஷல் வங்கி அதன் பல கிளைகளை முன்னைய ஆண்டுகளைப் போலவே அன்றாட நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.

தீபாவளி தினத்தன்று செயற்படவுள்ள 65 கிளைகளில் வங்கியின் 29 சுப்பர் மார்க்கெட் கிளை நிலையங்கள், 365 நாளும் இயங்கும் 19 கிளைகள என்பன வழமையான செயற்பாட்டைக் கொண்டிருக்கும். அத்தோடு மேலும் 17 கிளைகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை வழமையான அலுவல்களுக்காகத் திறந்திருக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.

அவிஸ்ஸாவலை, பத்தரமுல்லை, பொரளை, தெஹிவளை, வெளிநாட்டு கிளை, கிரிபத்கொடை, கொளு;ளுபிட்டி, கொட்டாஞ்சேனை, மகரகம, பிரதான வீதி (புறக்கோட்டை) நாரஹேன்பிட்டி, நுகேகொடை, பஞ்சிகாவத்தை, பிலியந்தலை, யூனியன் பிளேஸ், வத்தளை மற்றும் வெள்ளவத்தை ஆகிய கிளைகளே அன்றைய தினம் திறந்திருக்கும்.

கொமர்ஷல் வங்கியே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும். கொமர்ஷல் வங்கி  நாடு முழுவதும் 246 கிளைகளுடனும், 617 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. 2014ல் இலங்கையின் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X