2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தேயிலை விலை சரிவு

Gavitha   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நடைபெறும் தேயிலை ஏல விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜோன் கீல்ஸ் தேயிலை சந்தை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியில் தேயிலை உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த விலைச்சரிவு பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்நிலை தொடருமானால், விரைவில் சந்தையில் காணப்படும் கேள்வியை விட உற்பத்தி அதிகரித்துக்கு காணப்படும் என்பதுடன், மேலும் விலைகள் குறைவடையக்கூடும். ஒவ்வொரு நாட்டிலும் விற்பனைகளில் விலைச் சரிவு பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிவதுடன், கொழும்பு ஏல விற்பனையிலும் இந்த நிலை காணப்படுகிறது' என ஜோன் கீல்ஸ் தேயிலை சந்தை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இது பாரிய இழப்பை தோற்றுவிப்பதுடன், அவர்களின் கருத்துப்படி, தேயிலை உற்பத்தியின் போது நியம தரங்கள் பேணப்படாமை விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்ய தேயிலை கொள்வனவாளர்கள் அதிகளவு தேயிலையை தெரிவு செய்து கொள்வனவு செய்வதில் ஆர்வத்தை காண்பித்து வருவதுடன், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்;;ந்தவர்களும் தேயிலை கொள்வனவில் ஈடுபாட்டைக் காண்பித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X