2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தனிமைப்படுத்தல் மய்யமாக ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்தது ஹேமாஸின் டால்பின் ஹோட்டல்

Editorial   / 2020 மே 12 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி கட்டுப்பாட்டில் உள்ள க்ளப் ஹோட்டல் டால்பின், வய்க்கால், அர்ப்பணிக்கப்பட்ட கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக ஐந்தாவது வெற்றிகரமான வாரத்தை  நிறைவு செய்தது. அரசாங்கம், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், ஆயுதப்படையினர் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இதற்கான அனைத்து இயக்க செலவுகளையும் ஹேமாஸ் குழுமம், டால்பின் ஹோட்டல் ஆகியவை சுமந்து கொள்கின்றன.

க்ளப் ஹோட்டல் டால்பின் மார்ச் 30ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான கொவிவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் (NOCPCO) ஒப்படைக்கப்பட்டு, இதுவரை 200 க்கும் மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தலில் தங்க வைத்துள்ளது.

“தற்போது சுமார் 36 தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மை இராணுவத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. க்ளப் ஹோட்டல் டால்பின் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையமாக ஒரு மாதத்திற்கும் மேலாக எங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பதை நான் விசேடமாக கூற விரும்புகின்றேன்.

“இது மருத்துவ பணியாளர்கள், ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் கோவிட்-19க்கு எதிராக போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் ஏனைய நிறுவனங்களின் உறுப்பினர்களை,  ஆயுதப்படைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமையில் வைத்திருக்க பயன்படுகிறது. மேலும் வேறு எந்த விருந்தினர்களும் வளாகத்திற்குள் தங்கவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். இந்த தேசிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முதல் ஹோட்டல் இதுவாகும். இதனை தொடர்ந்து வேறு நிறுவனங்களும் இப்போது தனிமைப்படுத்தல் நிலையங்களாக முன்வந்துள்ளன” என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான தனிமைப்படுத்தலில் ஹோட்டலில் தங்கியிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக சமையல், பராமரிப்பு மற்றும் அடிப்படை தேவை சேவைகள் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் ஹோட்டலின் ஊழியர்களால் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தினமும் ஹோட்டலின் பராமரிப்பு சேவைகள் மற்றும் ஆயுதப்படைகளால் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்ட மெனுவின் பிரகாரம் உணவு தயாரிப்பாத்து ஆகிய பணிகளை புரிகின்றனர். தங்கியுள்ளோரின் தேவைகளை மேற்பார்வையிடுவதற்கும், கடினமான சூழ்நிலையை முடிந்தவரை இனிமையாக்குவதற்கும் ஆயுதப் படையினர் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் கைகோர்த்துள்ளன.

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் கதிரியக்கவியலாளராக பணிபுரியும்  அசிந்த நிலுபுல், கடமையில் ஈடுபட்ட நிலையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

“ஏப்ரல் 3 ஆம் திகதி நாங்கள் க்ளப் ஹோட்டல் டால்பினுக்குள் நுழைந்த தருணத்திலிருந்து எங்களுக்கு எல்லா வசதிகளும் வழங்கப்பட்டன. தனிமைப்படுத்தல் செயல்முறையை நிர்வகித்த ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் மேலதிகாரிகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஹேமாஸ் குழுமம் மற்றும் க்ளப் ஹோட்டல் டால்பின் நிர்வாகமும் ஊழியர்களும் இதுபோன்ற ஒரு அருமையான இடத்தை எங்களுக்கு வழங்கி செய்த அர்ப்பணிப்பு இல்லையென்றால், எங்கள் தனிமைப்படுத்தல் செயல்முறை முறையாக பூர்த்தியாகாமல்  இருந்திருக்கலாம். எங்களுக்கு சேவை செய்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறினார்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி அதிகாரிகளின் கூற்றுப்படி, நிறுவனம் எப்போதுமே நாட்டிற்கு சேவை செய்ய அனைத்து முயற்சிகலும் எடுத்து வருகிறது, மேலும் க்ளப் ஹோட்டல் டால்பின் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இந்த நெருக்கடியான நேரத்தில் முற்றிலும் இலவசமான தனிமைப்படுத்தல் நிலையமாக தொடர்ந்து செயல்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X