2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தானியங்கி ரொபோவை கையளித்தது அட்லஸ்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அட்லஸ் அட்லஸ் அக்சிலியா கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொலைநிலை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் மருத்துவ பணியாளர்களுக்கு உதவுவதற்காக,  உள்நாட்டு உற்பத்தியான இன்னுமொரு Automated Guided Vehicle (AGV)  தானியங்கி ரொபோவை ஒப்படைத்தது.

இரனவிலவில் COVID -19 சிகிச்சைக்கென அர்ப்பணித்த புதிய மருத்துவமனையை திறக்கும் போதே இந்த கையளிப்பு நடைபெற்றது. இந்த சிகிச்சை மய்யம் 2020 மார்ச் 07 அன்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் COVID -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் - இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரால் திறக்கப்பட்டது.

மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் திமுத் பொன்வீர தலைமையிலான இந்த மையம் அதன் முதல் கட்டத்தில் 40 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியுமானதாக அமைந்துள்ளது. தேவை ஏற்படும்போது மேலும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்.  முன்பு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி ஒலிபரப்பு நிலையம் இருந்த கட்டிடத்தை இரண்டு வாரங்களுக்குள் ஒரு முழுமையான சிறப்பு சிகிச்சை மையமாக இலங்கை இராணுவம் மாற்றி அமைத்தது.

இந்த AGV ரொபோ இயந்திரம், அட்லஸ் ஆக்சிலியா உருவாக்கிய இரண்டாவதாகும். புத்தாக்கமான முதல் AGV இயந்திரம், கொழும்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட, ஹோமகம ஆதார வைத்தியசாலையின் மருத்துவ உயரதிகாரி வைத்தியர் ஜனித ஹெட்டியாரச்சி, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் அமைப்பு, அபிவிருத்தி பணிப்பாளர், வைத்தியர் திலினி வனிகசேகர மற்றும் மலேரியா எதிர்ப்புத் திட்டம் பணிப்பாளர், வைத்தியர் ப்ரசாத் ரணவீர ஆகியோரின் வழிகாட்டுதலில் ஒப்படைக்கப்பட்டது.

இரனவில சிகிச்சை மையத்தில் ஒப்படைக்கப்பட்ட புதிய AGV இயந்திரத்தினால் நோயாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியும். அத்துடன் ரொபோ இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கமரா ஊடாக வைத்தியர்களுக்கு ஒரு இடத்திலிருந்தவாறு நோயாளிகளுடன்  தொடர்பாடல்களை பேணவும் அவர்களை தொலைவிலிருந்து கண்காணிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த AGV ரொபோ பயன்பாட்டினூடாக சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு தமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி இடர்கள் நிறைந்த சூழலில் பாதுகாப்பாக உயிர்களை காக்கக்கூடியதாக இருக்கும்.

அட்லஸின் பொறியியல் குழு இந்த முக்கியமான நேரத்தில் தேசிய பணிக்காக பங்களிக்கும் ஒரே நோக்கத்துடன் புத்தாக்க கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளது.

“60 வருடங்களுக்கு மேலாக தேசிய ரீதியில் சேவைகளை வழங்கி வரும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், நம் நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய மருத்துவ சவால்களில் ஒன்றை சமாளிக்க ஒரு தேசிய இயக்கத்திள் பங்கு பெற அழைக்கப்பட்டதில் நிறுவனம் தாழ்மையான மகிழ்ச்சி அடைகிறது” என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அதிகமான இயந்திரங்களைத் தயாரிக்க விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் தங்கள் கற்றல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர்கள் மேலும் உறுதியளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X