Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபரணங்கள் உற்பத்தி, வாடிக்கையாளர் சேவையில் திரீ மலீ ஜுவல்லர்ஸ் காண்பிக்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புக்காக, தங்க ஆபரண உற்பத்தி, விற்பனைக்கான ISO 9001:2015 சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளது. இதனூடாக இலங்கையின் முதலாவது ISO சான்றிதழைப் பெற்று ஆபரண விற்பனையாளராக திரீ மலீ ஜுவல்லர்ஸ் திகழ்கின்றது.
ஆபரணங்கள் உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்காக திரி மலீ ஜுவல்லர்ஸ் பேணும் உயர் நியமங்களுக்காக, ஐக்கிய இராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற நடுவர்கள் குழு கௌரவித்திருந்ததுடன், தரம், புத்தாக்கம் மற்றும் பெறுமதி ஆகியவற்றுக்கமைய இந்த கௌரவிப்பை வழங்கியிருந்தது. துறையின் ஒவ்வொரு பிரிவையும் உள்வாங்கும் வகையில் இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. ஆபரண துறையில் ஈடுபாடு, ஈர்ப்பு, ஊக்குவிப்பு ஆகியவற்றை ஐக்கிய இராஜ்ஜியம் வரவேற்றிருந்தது.
SGS இன்டர்நஷனல் முன்னெடுத்திருந்த கருத்தாய்வின் பிரகாரம் இந்த சான்றிதழை வழங்கியிருந்தது. இதனூடாக திரி மலீ ஜுவல்லர்ஸ் சேவைகள் தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளின் பிரகாரம் அமைந்திருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரி மலீ ஜுவல்லர்ஸ் 1974 ஆம் ஆண்டில் ஈபர்ட் ராஜசேகரவினால் நிறுவப்பட்டிருந்தது. 1992 ஆம் ஆண்டில் மலீ ஜுவல்லர்ஸ் தனது முதலாவது காட்சியறையை நிட்டம்புவ பகுதியில் திறந்திருந்தது. கசுன் ராஜசேகர இந்த வியாபாரத்தை பொறுப்பேற்றதன் பின்னர், அதன் நவீன மயப்படுத்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago