2025 மே 19, திங்கட்கிழமை

தீவிர பராமரிப்பை மேற்கொள்ள Ceyoka உதவி

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

Anaesthesiologists and Intensivists நிறுவகத்தின் 36ஆவது வருடாந்த கல்விசார் மாநாடு அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் முன்நோக்கி பயணிப்பதற்கும்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது. 

தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக இந்த மாநாட்டுக்கும் hemodynamic கண்காணிப்புடன் தொடர்புடைய பயிற்சிப்பட்டறைக்கும் Ceyoka அனுசரணை வழங்கியிருந்தது. இதனூடாக Anaesthesiologists மற்றும் Intensivists களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதில் Ceyoka பங்களிப்பு வழங்கியிருந்தது. 

Anaesthesiologists and Intensivists களுக்கு தீவிர சிகிச்சைகளை முன்னெடுக்க அத்தியாவசியமான ஸ்மார்ட் தீர்வுகளை Ceyoka பிரைவட் லிமிடெட்டின் துணை நிறுவனமான Ceyoka ஹெல்த், நவீன, புத்தாக்கமான HemoSphere platform ஐ காட்சிப்படுத்தியிருந்தது. இதனூடாக சிகிச்சையில் ஈடுபடுவோருக்கு நோயாளர்கள் பராமரிப்பை செம்மையாக்கம் செய்வது மற்றும் பிரத்தியேகப்படுத்துவதற்கான பரிபூரண வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்தது. 

கட்டமைக்கப்பட்ட இருதய நோய்கள் மற்றும் தீவிர பராமரிப்பு கண்காணிப்பு ஆகியவற்றுக்கான நோயாளர்களை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்கங்களில் சர்வதேச ரீதியில் முன்னோடியாகத் திகழும் ஸ்மார்ட் கட்டமைப்பான Edwards Lifesciences, hemodynamic parameter களுடன் சிகிச்சையாளர்களின் ஈடுபாடு மற்றும் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது. மதிநுட்பமான தீர்மான-உதவி தீர்வுகளினூடாக, hemodynamic தகவலை சக்திவாய்ந்த வகையில் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதற்கான முதலாவதும் ஒரே கட்டமைப்புமாக இது திகழ்கின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X