2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நெருக்கடியில் ஜேர்மனிய டொயிச்ச வங்கி

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய வங்கியான டொய்ச் வங்கி பாரிய நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக தவறான முறையில் கடன் இணைக்கப்பட்ட முறிகளை விற்பனை செய்திருந்தமைக்காக 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக அமெரிக்காவுக்கு செலுத்த நேரிட்டுள்ளதன் காரணமாக இந் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   

இந்நிலையில், வங்கியை நெருக்கடியான நிலையிலிருந்து மீட்கும் வகையில், ஜேர்மனி நாட்டின் முன்னணி நிறுவனங்கள் சில முன்வந்துள்ளன. இதில் சீமென்ஸ், டேமிளர், முனிச் ரீ மற்றும் BASF போன்றன அடங்கியுள்ளன.   

அமெரிக்காவின் இந்த  நட்டஈடு கோரிக்கையை வங்கியால் நிறைவேற்ற முடியாமல் போனால், வங்கிக்கு உதவ ஜேர்மனிய அரசாங்க தயாராகவுள்ளது என வெளியாகிய தகவல்களை ஜேர்மனிய அரசாங்க மறுத்திருந்த நிலையில், இந்த முக்கிய வர்த்தக நிறுவனங்கள் வங்கிக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.   

வங்கியின் பங்குகளின் விலைகள் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், கடந்த 30 வருடங்களில் பதிவாகிய குறைந்த பெறுமதியைப் பதிவு செய்துள்ளன.   

வருடாந்த சர்வதேச நாணய நிதிய சந்திப்பில் டொயிஷ் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் கிரையன் பங்கேற்கவுள்ள நிலையில், இதன் போது வங்கியின் மீது அமெரிக்கா கோரியுள்ள நட்டஈட்டுத் தொகையை மீள பரிசீலனைச் செய்யுமாறு கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X