2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மொபிடெல் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை நிலையம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வசதிகளை பெற்றுக் கொடுக்கும் தனது நோக்கத்துக்கமைவாக, குருநாகலையில்; அமைந்துள்ள தனது வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மெருகேற்றம் செய்துள்ளது. ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் ஆகிய நிறுவனங்களின் தலைவர் திரு. பி.ஜி. குமாரசிங்க அவர்கள் இந்த நவீன வசதிகள் படைத்த கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நாடு முழுவதையும் சேர்ந்த சகல மொபிடெல் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகள் வழங்கும் நிலையங்களினூடாக வழங்கப்படும் சேவைகளுக்கு நிகரான சேவைகள் இந்த நிலையத்தினூடாகவும் வழங்கப்படுகிறது இப்பிராந்தியத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நவீன 4G LTE சேவைகளை வழங்கும் வகையில், இந்த நிலையம் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப்பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு அதி நவீன ஸ்மார்ட்ஃபோன்கள், டெப்லட்கள் மற்றும் டேடா சாதனங்கள் ஆகியவற்றை அனுபவித்து மகிழ முடியும். 

உலகளாவிய ரீதியில் உயர் தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட சாதனங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த கிளை மீள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, குருநாகல் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை நிலையத்தின் மூலமாக ஹெட்செட்டுகள்; மற்றும் டொங்கிள்கள் ஆகியவற்றுக்கு விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கு பொருத்தமான இணைப்புகளையும் தெரிவு செய்து கொள்ளக்கூடிய வசதியும் ஒக்டோபர் மாதம் முழுவதும் வழங்கப்படவுள்ளது.

மேலும், 183C/1, கொழும்பு வீதி குருநாகல் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை நிலையத்தின் மூலமாக, மாணவர்களுக்கு தொலைதூர கற்கைகளை இலகுவாக பயிலக்கூடிய வகையிலமைந்த 'mLearning', புகையிரத டிக்கட் முன்பதிவு மற்றும் விமான பயண டிக்கட் முன்பதிவு சேவைகளான 'mTicketing', சிறந்த சுகாதார பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான 'mHealth', இடத்தை துல்லியமாக கண்டறிய உதவும் GPS கட்டமைப்பான  'mTrack', பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இலத்திரனியல் அட்டையான 'iCard', விசேட ஹோட்டல் முற்பதிவுகளுக்கு உதவும் 'mReservations', தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு சேவைகளுக்காக 'Doc Call', துரித கதியில் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதற்கு 'mTaxi', எரிபொருள் நிரப்பு நிலையங்களில் துரித கதியில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள உதவும் NFC அடிப்படையிலான எரிபொருள் கார்ட் கட்டமைப்பு போன்றன வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X