2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

நவீன டிஜிட்டல் SITA அறிமுகம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025ம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கினை எட்டி, 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற இலங்கையின் இலக்கு நெருங்கி வரும் நிலையில், ஆகாயப் போக்குவரத்துத் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற SITA, தேசத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் நவீன தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
 
2024ம் ஆண்டில் 8.88 மில்லியன் பிரயாணிகளை இலங்கை வரவேற்றிருந்ததுடன், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.6% அதிகரிப்பாக அது அமைந்தது. 2025ன் முதற்பாதியில் மாத்திரம் 4.9 மில்லியன் பேர் வருகை தந்துள்ளதுடன், 2024ன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16% அதிகரிப்பாகும். இதனுடன் இணைந்ததாக ஆகாயவிமானங்களின் போக்குவரத்து 2024ல் 20% ஆல் அதிகரித்துள்ளதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்போது பாரிய விஸ்தரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் தீர்வுகளின் வலுவூட்டலுடன், இடையறாத, திறன்மிக்க, மற்றும் பாதுகாப்பான பிரயாணிகள் போக்குவரத்தின் மீது முதலீடு செய்வதன் அவசர தேவையை மேற்குறிப்பிட்ட நிர்மாணப் பணிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
 
2024ம் ஆண்டில் சர்வதேசரீதியான விமானப் போக்குவரத்து துறை வரலாற்றில் உச்சத்தை எட்டியுள்ளதுடன், 2019ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகூடிய தொகையாக அமையும் வகையில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான முதலீட்டுச் செலவுகள் 37 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற பாரிய தொகையாக அமைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த முதலீடுகளில் பெரும்பங்கு, செயல்பாடுகளை வலுப்படுத்தி, பிரயாணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக மேகக் கணினி மாற்றம் (cloud migration), செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் இணையப்பாதுகாப்பு (cybersecurity) ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான விமான சேவைகள் 90% என்ற வீதத்தில் புள்ளி விபரத் தளங்களை கைக்கொண்டுள்ளதுடன், இன்னும் கூடுதலான அளவில் அறிவார்ந்த, ஒருங்கிணைந்த கட்டமைப்புக்களை கட்டியெழுப்புவதில் தொழில்துறை கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. 
 
உருவாக்க செயற்கை நுண்ணறிவு (generative AI), கணினி நோக்கு (computer vision), மற்றும் பாரிய மொழி வடிவங்கள் (large language model) உள்ளிட்ட, நவீன, புள்ளி விபரங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகள் அவற்றில் 50% இலக்காக தற்போது காணப்படுவதாக SITA சமீபத்தில் மேற்கொண்ட தொழில்துறை ஆய்வு காண்பிக்கின்றது.
 
இத்தீர்வுகள் ஏற்கனவே இணைய பாதுகாப்பு முதல் வாடிக்கையாளர் சேவை வரையில் செயல்பாடுகளை சீரமைத்துள்ளதுடன், பிரயாண உகப்பாகம் (cruise optimisation) மற்றும் நிலைபேணத்தக்க விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel - SAF) பயன்பாட்டைக் கைக்கொள்வது போன்ற புத்தாக்கங்களினூடாக விமானப் போக்குவரத்துத் துறையை இன்னும் கூடுதலான அளவில் நிலைபெறச் செய்வதற்கு வழிவகுத்துள்ளன. 
 
2024ம் ஆண்டில் சர்வதேச ரீதியாக ஆகாயமார்க்க பிரயாணிகளின் எண்ணிக்கை 5.3 பில்லியன் என்ற சாதனையை எட்டியுள்ளதுடன், அவர்களுடைய பயணப் பொதிகளை கையாள்வது முன்னெப்போதும் இருந்திராத அளவில் அழுத்தத்தைத் தோற்றுவித்துள்ளது.
 
எனினும் அவற்றை முறையற்ற வகையில் கையாள்வது 8.7% ஆல் மேம்பட்டுள்ளதுடன், 1,000 பிரயாணிகளுக்கு 6.3 பிரயாணப் பொதிகள் என்ற மட்டத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது 2007ம் ஆண்டு முதற்கொண்டு 67% வீழ்ச்சியாகும். இன்னமும், பிரயாணப் பொதிகளை முறையற்ற வகையில் கையாள்வது ஆண்டுதோறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
 
தன்னியக்கமயமாக்கம் மற்றும் நிகழ்நேர புள்ளி விபரங்கள் இத்துறையை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை SITA ன் பிரயாணப் பொதி தகவல் தொழில்நுட்ப நுண்ணறிவு அறிக்கை (Baggage IT Insights Report) சுட்டிக்காட்டுகின்றது. சுயமாகவே பிரயாணப் பொதிகளை இடுதல் (Self-service bag drop), இலத்திரனியல் பெயர் பட்டிகள் (electronic tag), IoT, மற்றும் GPS வசதி கொண்ட கண்காணிப்பு முறைமை ஆகியன சாதாரண நடைமுறைகளாக மாறி வருகின்றன.
 
நிகழ்நேரத்தில் பியாணப் பொதிகளை கண்காணிப்பதன் மூலமாக தற்போது 42% பிரயாணிகள் பயன்பெற்றுவருவதுடன், இது 2027ம் ஆண்டளவில் 82% ஆக அதிகரிக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், உள்வரும் சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது ஏற்கனவேயுள்ள கட்டமைப்புக்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், வினைதிறன் மற்றும் பிரயாணிகளின் நம்பிக்கையைப் பேணுவதில் மேற்குறிப்பிட்ட புத்தாக்கங்கள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.
 
சுற்றுலாத்துறையால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான, ஆனால் வரவேற்கத்தக்க எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. குடிவரவு, சுங்கம், பாதுகாப்பு, மற்றும் பொதுச் சுகாதாரம் மூலமான ஆபத்துக்களை நிர்வகிப்பதற்கு டிஜிட்டல் எல்லைக்கட்டுப்பாட்டு முகாமைத்துவத் தீர்வுகளை உலகளாவில் அரசாங்கங்கள் கைக்கொண்டு வருகின்றன. SITA ன் நவீன பிரயாணிகள் நடைமுறைத் தீர்வு (Advance Passenger Processing - APP), விமான சேவையுடன் நிகழ்நேரத்தில் புள்ளி விபரங்களைப் பகிர்ந்து கொள்ள இடமளிப்பதுடன், பிரயாணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பதாக உரிய அதிகாரிகள் கண்காணிப்புச் சோதனைகளை மேற்கொள்ள இடமளிக்கின்றது.
 
அதிக ஆபத்துக் கொண்ட நபர்கள் பிரயாணம் செய்வதிலிருந்து தடுக்கப்படுவதை இது உறுதி செய்வதுடன், சட்டபூர்வமான பிரயாணிகள் சீரான, விரைவான வருகையை அனுபவித்து மகிழ்வதற்கு வழிவகுக்கின்றது. டோகா மற்றும் டுபாய் போன்ற பாரிய இடைத்தங்கல் மையங்கள் அடங்கலாக, 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இது ஏற்கனவே அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைளை பாதுகாத்து, சீர்படுத்துவதில் APPஆல் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
 
ICAO ன் டிஜிட்டல் பிரயாண சான்று (Digital Travel Credential - DTC) தீர்வைக் கைக்கொள்வது ஒட்டுமொத்த செயல்முறையின் போக்கினை மாற்றியமைக்கும் மற்றுமொரு வழக்கமாக மாறியுள்ளது. அங்கவடையாள சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் கடவுச்சீட்டுக்களுக்கு இடமளிப்பதனூடாக, புள்ளி விபரத் தவறுகளைப் போக்கி, பாதுகாப்பை மேம்படுத்தி, மற்றும் பிரயாணிகள் உள்வருவதை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களால் முடியும். வேகமான சுற்றுலாத்துறை வளர்ச்சியை இலக்கு வைத்துள்ள ஒரு நாட்டுக்கு, டிஜிட்டல் அடையாளம் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு குறித்த புத்தாக்கம் முக்கியமாக துணைபோகின்றன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கும்பின்வரும் சேவைகளை வழங்கும் தனித்துவமான ஸ்தானத்தில் SITA உள்ளது: 
 
பிரயாணிகளின் உள்வருகை முகாமைத்துவம் (Passenger Flow Management) - ஆவணங்களைச் சரிபார்த்து உள்நுழைதல் (check-in), விமானத்தில் ஏறுதல் (boarding), மற்றும் பிரயாணப் பொதிகளை கையாளுதல் ஆகியவற்றை தொடுகையின்றிய மற்றும் சுய சேவை முறையிலான தீர்வுகளுடன் சீரமைத்தல்.
 
புள்ளி விபரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு (Data and AI Integration) – விமானசேவை செயல்பாடுகளை உச்சப்பயனாக்கி, விமானத்தினுள் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தி, மற்றும் இணையப்பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக முன்கணிப்பு பகுப்பாய்வுகளின் அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளல். 
 
பிரயாணப் பொதி முகாமைத்துவம் (Baggage Management) - முறையற்ற வகையில் கையாளப்படல் மற்றும் அது தொடர்புபட்ட செலவுகளைக் குறைப்பதற்கு நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தன்னியக்கமயமாக்கத்தை வழங்குதல்.
 
எல்லைக்கட்டுப்பாட்டு பாதுகாப்பு மற்றும் அனுசரணை (Border Security and Facilitation) – பாதுகாப்பு மற்றும் பிரயாணிகளின் சௌகரியம் ஆகியவற்றை சமமாகப் பேணுவதற்கு APP மற்றும் டிஜிட்டல் விபரங்களைப் பிரயோகித்தல்.
 
நிலைபேற்றியல் கொண்ட தீர்வுகள் (Sustainability Solutions) – பிரயாண உகப்பாக்கம், SAF கைக்கொள்ளல், மற்றும் உமிழ்வைக் குறைப்பதற்கான கருவிகளுடன் விமான சேவை நிறுவனங்களுக்கு உதவுதல்.
 
நவீன காலத்து பிரயாணிகளின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும்அதேசமயம், இலங்கை தனது வருமானம் மற்றும் பிரயாணிகள் வருகையின் வளர்ச்சி இலக்குகளை அடையப்பெறுவதற்கு நெகிழ்திறன் கொண்ட விமானப் போக்குவரத்து முறைமையொன்றைத் தோற்றுவிப்பதற்கு இத்தீர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
சர்வதேச விமானப் போக்குவரத்து பிரயாணிகளின் எண்ணிக்கை 2037ம் ஆண்டளவில் 8 பில்லியன் என்ற இலக்கினை எட்டுமென எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், பிராந்திய மையம் என்ற வகையில் தனது போட்டித்திறனை தொடர்ந்தும் தக்கவைப்பதை உறுதி செய்வதில் நவீன டிஜிட்டல் பிரயாணத் தீர்வுகளை ஒருங்கிணைக்கும் இலங்கையின் ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும்.
 
பிரயாணப் பொதிகள், எல்லைக்கட்டுப்பாடு, மற்றும் பிரயாணிகளின் வருகை ஆகியவற்றில் புத்தாக்கங்களை கைக்கொள்வதனூடாக, முன்னணி சுற்றுலாத்துறை நாடு என்ற தனது ஸ்தானத்தை நாடு தக்க வைக்கும்அதேசமயம், ஒவ்வொரு பிரயாணமும் திறன்மிக்கதாக, பாதுகாப்பானதாக, மற்றும் இன்னும் கூடுதலான அளவில் இடையறாத ஒன்றாக இருப்பதை உறுதி செய்யும்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .