Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப்ரியந்த தல்வத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளதாக நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி இன்று அறிவித்தது. மேலும் முன்னாள் பணிப்பாளர் / தலைமை நிர்வாக அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ பணி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக வங்கியின் நிர்வாகக் குழுவின் முக்கிய பங்கை வகித்த திரு. தல்வத்த, 2019 ஜனவரியில் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளில் 27 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவத்துடன், ப்ரியந்த தல்வத்த நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியில் நுகர்வோர் வங்கி வணிகத்தை மாற்றியமைத்த வணிகத் தலைவராக திகழ்ந்தார். மாறிவரும் வணிக உலகத்துடன் போட்டியிடும் வகையில், அவர் டிஜிட்டல் வங்கி முறையின் முன்னணி ஆதரவாளராகவும், உகந்த வாடிக்கையாளர் வசதிக்காக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கவும், வங்கிகளின் நேரடி வங்கி மற்றும் டிஜிட்டல் சேனல்களை நிறுவவும் பலப்படுத்தவும் செய்தார்.
தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் குறித்து நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் கிஹான் குரே கூறுகையில்,
“தல்வத்த வங்கியை தனது இலக்குகளை அடைய வழிநடத்துவார் என்று பணிப்பாளர் சபைக்கு பூரண நம்பிக்கை உள்ளது. தல்வத்த இந்த பணிக்கு மிகவும் பொருத்தமான நபராவார், அவரது புதிய பாத்திரத்தில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
தல்வத்த, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன் சிறந்த வேலை செயல்முறை மற்றும் நடைமுறைகளை வங்கியின் அகத்திலும் புறத்திலும் செயல்படுத்தி உள்ளூர் சந்தையில் முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநராகவும், கையகப்படுத்துபவராகவும் வங்கியை நிலைநிறுத்தினார். நுகர்வோர் வங்கி துறையில் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் நிலையை உறுதிப்படுத்தவும், புதிய வணிக அலகுகளை அமைப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். வங்கியின் தற்போதைய வணிக அலகுகளை விரிவுபடுத்துதலிலும், புதிய வணிகங்களை உருவாக்கி அவற்றின் லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் அவர் நிபுணரானார்.
தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் பெற்றதை குறித்து பேசிய ப்ரியந்த தல்வத்த,
“எங்கள் சகல பணிகளிலும் தைரியமான, முன்னோக்கு சிந்தனை நிறைந்த அணுகுமுறைக்கு நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி எப்போதும் அறியப்படுகிறது. அவரது 8 ஆண்டு கால தலைமையில் வங்கியை முன்னோக்கி செலுத்தி எதிர்கால வளர்ச்சியைத் தொடர ஒரு வலுவான மேடையில் நிலைநிறுத்தியமைக்கு, எனது முன்னோடி ரேணுகா பெர்னாண்டோவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். வேகமாக மாறிவரும் உலகில் முன்னேற நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியை அதன் மிகவும் சிறந்த தோற்றத்திட்கு மாற்றுவதுற்கான எனது பணியைத் தொடர நான் உறுதியாக இருக்கிறேன். பணிப்பாளர் சபை மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் குழு என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும், எங்கள் வாடிக்கையாளர்கள், வணிக பங்காளிகள் மற்றும் வங்கியின் பயணத்தில் மற்ற அனைத்து பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவும், எங்கள் பொதுவான இலக்கை எட்ட முடியும் என்ற உறுதியை எனக்கு அளிக்கிறது” என்றார்.
இடர் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் விற்பனை, சேவை மற்றும் வணிக மேம்பாட்டு கலாசாரத்தை வளர்ப்பதில் தல்வத்த காட்டிய தலைமை வங்கியின் செயல்பாடுகளை மாற்றியமைத்தது. அவர் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்பை வங்கியின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் முன்மொழிவுகளுக்கான கருவியாக மாற்றினார், மேலும் ஒரு தனித்துவமான வாடிக்கையாளர் மேலாண்மை செயல்முறையை உருவாக்கி, இலங்கை சந்தையில் பெரும்பான்மையான உயர் மதிப்பு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்ற பெருமையை வங்கிக்கு பெற்றுக்கொடுத்தார்.
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிச்னஸ் ஸ்கூலின் (Harvard Business School) மேம்பட்ட மேலாண்மை திட்டத்தின் (AMP-196) பழைய மாணவரான ப்ரியந்த தல்வத்த, ஐக்கிய இராச்சியத்தின் Chartered Institute of Marketing இன் தகுதிவாய்ந்த சந்தைப்படுத்துபவர் (Chartered Marketer) பட்டதாரியும் ஆவார்.
Business Today சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 15 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சௌகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் வங்கியான FriMiஇன் பின்னால் செயற்படும் வங்கியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமைந்துள்ளது. நாடு முழுவதும் வங்கி 96 கிளைகளை கொண்டுள்ளது. அத்துடன் தனது ATM வலையமைப்பை 127 பகுதிகளில் கொண்டுள்ளதுடன், 48 பண வைப்பு மற்றும் மீளப் பெறல் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. டுயமெய Pயல வலையமைப்பில் 3700க்கும் அதிகமான ATM களுடனும் இணைந்துள்ளது. இலங்கையில் American Express® அட்டைகளை விநியோகிக்கும் ஏக உரிமையை கொண்ட வங்கியாக திகழ்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago