2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாகிஸ்தான் புதுப்பிக்கத்தக்கதான எரிசக்தித்துறை முதலீட்டை கவர்ந்துள்ளது

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் புதுப்பிக்கத்தக்கதான எரிசக்தித்துறை, இந்த வருடத்தில் மாத்திரம் 3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை கவர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, கிடைக்கப்பெறுகின்ற வளங்களை பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை  எடுத்துக் காட்டுவதுடன், இத்துறையில் பாரியளவில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது.

சிறந்தக் கொள்கை கட்டமைப்பு, கூடிய சந்தர்ப்பங்கள ஏற்படுத்துதல், வங்கி பாதுகாப்பு மற்றும் கட்டண கட்டமைப்புக்கள் என்பன காரணமாகவே, பாகிஸ்தான் தனியார் முதலீட்டுக்கு மிகச் சிறந்த நாடாக விளங்குகின்றது என்று, மாற்று எரிசக்தி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி அம்ஜத் அவான் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கம், கிடைக்கப்பெருகின்ற புதுப்பிக்கதக்கதான எரிசக்தி வளத்தின் முக்கியத்துவத்தை  எடுத்துக்காட்டுவதற்கும் எரிசக்தி துறையின் பாதுகாப்பை  உறுதிப்படுத்துதற்கும் நிலையான அபிவிருத்தியின் பொருட்டும் நடைமுறைக்கேற்ற நடவடிக்கைகளை, ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

புதுப்பிக்கதக்கதான எரிசக்தி துறையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றமானது, கடந்த ஒரு வருடத்துக்குள் பாரியளவிலான சாதனையை படைத்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் எடுத்துகாட்டுவதாக அமைகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

காற்று, சூரியசக்தி மற்றும் உயிரியல் வள விரிவான மதிப்பீடு, உலக வங்கியின் உதவியுடன் நாட்டில் நடாத்தப்பட்டது. சூரிய கதிர்வீச்சு அளவீட்டுக்கான தரைவழி கட்டமைப்பு, நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25க்கும் அதிகமான கோரிக்கை கடிதங்கள், மாற்று எரிசக்தி மேம்பாட்டு வாரியத்தினால் 600 Mw சூரியசக்தி திட்டங்களுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை 2018ஆம் ஆண்டளவில் வர்த்தகரீயான சாதனைகளை அடைந்திருக்கும் என தலைமை நிர்வாகி அம்ஜத் அவான் தெரிவித்தார்.

பஞ்சாப் பிராந்திய அரசு 600 Mw சூரியசக்தி திட்டங்களுக்காக கோரிக்கைக் கடிதங்களை பெற்றுக்கொடுத்துள்ளன. அத்துடன், 300 Mw திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுவருவதுடன், ஏற்கனவே அத்திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

Quaid-i-Azam R+upa சூரிய சக்தித்திட்ட பூங்கா, ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுடன், 100 Mw மின் சக்தியை வழங்கி வருகின்றது. மேலும் 300 Mw தேசிய மின் கட்டமைப்பினுள், 2016ஆம் ஆண்டளவில் இணைத்துக் கொள்ளப்படும் என தலைமை நிர்வாகி குறிப்பிட்டார். இப்பூங்கா 2017ஆம் ஆண்டளவில், 1,000 Mw மின் தேவையை பூர்த்தி செய்திருக்குமெனவும் அத்துடன் மாற்று எரிசக்தி மேம்பாட்டு  வாரியமானது, 1,111.44 Mw கொள்திறன் கொண்ட 35 சூரியசக்தி திட்டங்களை நாட்டினுள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தலைமை நிர்வாகி அம்ஜத் தெரிவித்தார்.

300 Mw கொள்திறன் கொண்ட மூன்று சூரியசக்தி திட்டங்கள் FFHD உடன்படிக்கை EPA மற்றும் IA நிறுவனங்களுடன் கைச்சாத்தப்பட்டிருப்பதுடன், அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. M/s அப்பலோ சூரியசக்தி பாகிஸ்தான் கம்பனி (100Mw), M/S க்ரஸ்ட் எனர்ஜி பாகிஸ்தான் கம்பனி (100Mw) M/s Best Green Energy Pakistan Ltd என்பன இம்மூன்று திட்டங்களும் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

MW IPPs  நிறுவனங்கள் 47.84 Mw கொள்திறன் அளவுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாற்று எரிசக்தி மேம்பாட்டு வாரியத்திடம் தமது அனுமதி கடிதங்களைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் இம்மாதம் இறுதிக்குள் அவர்களின் நிதிநிலையை அடைந்து விடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என தலைமை நிர்வாகி அம்ஜத் தெரிவித்துள்ளார்.

M/s Access Electric Pvt (10MW), பின் தாதன் காஹான், M/s Bukhsh solar Put (10MW) பாஹவல்பூர், M/s Sanjwal Solar Power (5.04) சஞ்சவல், M/s Safe solar power Pvt (10.28MW) பாஹவல்பூர், M/s Access Solar Put (11.52MW), பின் தாதன் காஹான் மற்றும் M/S Blue star Hydel Pvt (1MW) போன்ற நிறுவனங்கள் ஊடாக மேற்படி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தினூடாக 259 Mw சூரியசக்தி திட்டங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. உயர் தரம் கொண்ட சூரியசக்தி உபகரணங்கள் இத்திட்டத்தின் போது,  பயன்படுத்துவதற்கான அனுமதியை பொருளாதார ஒத்துழைப்பு குழு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X