Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், RS QST RB 500 உருக்குக் கம்பிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள IWW Steel கம்பனி லிமிட்டெட், நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தது.
தொழிற்சாலையை அண்மித்து வசிக்கும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. உஸ்வெடகெய்யாவப் பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் வளாகத்தில் இந்த வைபவம் நடைபெற்றது. IWW Steel தலைமை அதிகாரி கலாநிதி சிவலிங்கம் ரமேஷ் கருத்துத் தெரிவிக்கையில், IWW Steel நிறுவனம் ஒவ்வொரு வருடத்தையும் பாடசாலை மாணவர்களுக்கு அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
“2017ஆம் ஆண்டை நாம் எமது ஊழியர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்களை கையளித்திருந்ததுடன் ஆரம்பித்தோம். அத்துடன், தொழிற்சாலையை அண்மித்து வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் நாம் இந்த அன்பளிப்பை வழங்கியிருந்தோம். இந்த மாணவர்கள் சிறப்பான முறையில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நாட்டுக்குப் பொறுப்பு வாய்ந்த குடிமகன்களாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்” என்றார்.
“ IWW Steel கம்பனி குறுகிய காலப்பகுதியில், இலங்கையின் முன்னணி உருக்கு இரும்பு கம்பிகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு போன்றன இதற்கு பிரதான காரணமாகும். எனவே, எமது ஊழியர்களின் ஊக்கத்தைப் பேணும் வகையில் ஆண்டின் முற்பகுதியில் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்தோம். எமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைக் கையளித்திருந்தோம். இது அந்த சிறுவர்களுக்கு நிவாரணமாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்” என்றார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago