Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசத்திற்கு போஷாக்கு வழங்கி வரும் CBL நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் சமபோஷ அனுசரணையுடன் தொடர்ந்து ஏழாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டித்தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமானது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் இப் போட்டித்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் 400 ஆண்கள் அணிகளையும், 100 பெண்கள் அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதுமிலிருந்து 500 பாடசாலைகளைச் சேர்ந்த 10,000 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றவுள்ளனர். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 32 நிலையங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 3ஆம் திகதி வரை யாழ் நகரில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்று போட்டிகளில் 32 ஆண்கள் அணியினரும், 24 பெண்கள் அணியினரும் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டித்தொடரின் முடிவில் சிறந்த ஆண் மற்றும் பெண் வீர வீராங்கனை விருதுகளும், சிறந்த கோல் காப்பாளர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.
இந்த போட்டித்தொடர் குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், '15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டித்தொடர் எனப்படுவது கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மத்தியிலுள்ள நட்புறவு மற்றும் போட்டித்தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக குறிப்பிட முடியும். உத்வேகம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இந்த போட்டித்தொடரின் ஊடாக கால்பந்தாட்ட நட்சத்திரங்களை எம்மால் அடையாளம் காண முடிந்துள்ளது. மேலும் கால்பந்தாட்டம் மீது மாணவ, மாணவியரின் ஆர்வத்தையும், உத்வேகத்தையும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கால்பந்தாட்ட விளையாட்டின் அபிவிருத்திக்காக சமபோஷ வழங்கிய பங்களிப்பு கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளதுடன், அந்த ஏழு ஆண்டுகளில் சமபோஷ கிண்ணத்திற்காக போட்டியிட்ட வீர, வீராங்கனைகள் இன்று தேசிய மட்டத்தில் விளையாடும் நட்சத்திரங்களாக இருப்பதை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
குழந்தைகளின் போசாக்கு தேவைகளுக்கு பாதுகாப்பான தீர்வுகளை வழங்கி வருகின்ற சமபோஷ எதிர்கால தலைமுறையினரை வலுவூட்டும் குறிக்கோளுடன் இப் போட்டித்தொடருக்கான தமது அனுசரணையை வழங்கி வருகிறது. இதற்கு முன்னரும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டித்தொடர்களுக்கு அனுசரணை வழங்கியுள்ள சமபோஷ இனிவரும் காலங்களிலும் கால்பந்தாட்ட விளையாட்டின் மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என CBL நிறுவனத்தின் துணை நிறுவனமாக பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார். 'விளையாட்டு என்பது வெறும் சக்தியை வெளிப்படுத்த மட்டுமல்லாது, எதையும் தாங்கும் மனப்பான்மை, தன்னம்பிக்கை மற்றும் பரஸ்பரத்தை கட்;டியெழுப்பல் போன்றவற்றிற்கும் மிகவும் முக்கியமாகும். இவை அனைத்திற்கும் சீரான போசணை அத்தியாவசியமாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற சமபோஷ பாடசாலைகளுக்குகிடையிலான கால்பந்தாட்ட போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் காலி கன்னங்கர மகா வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியும் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தன. 'கால்பந்தாட்டம் என்பது உலகம் முழுவதும் மிகப் பிரபல்யமான விளையாட்டாகும். இதற்கு தேவையானதெல்லாம் ஒரு மைதானம் மற்றும் பந்துடன் ஆற்றல்மிக்க வீர, வீராங்கனைகள் மட்டுமேயாகும். சீரான போசணை ஊடாக மாத்திரமே விளையாட்டுக்கு தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய சமபல போசாக்கினை சமபோஷ வழங்குகிறது. சம்பிரதாய முறையில் பால், முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும்; புரதம் மற்றும் உடலுக்கு தேவையான காபோவைதரேற்று, விற்றமின் உள்ளிட்ட ஏனைய ஊட்டச்சத்துக்களை ஒரே ஆகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமபோஷ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தேவையான போசாக்கு மற்றும் சமபலம் ஆகியவற்றை பெறுவதற்கான சிறந்த வழியாக இதனை குறிப்பிட முடியும்' என சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago