2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு செயலமர்வு: வலுச்சேர்க்கும் ஹொல்சிம் லங்கா

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், சீமெந்து துறையில் முன்னோடியாக திகழ்வதுடன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாதுகாப்பு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. 2015 டிசெம்பர் 11ஆம் திகதி சினமன் லேக்சைட் ஹோட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஒப்பந்தக்காரர் பாதுகாப்பு செயலமர்வு என்பது, ஹொல்சிம் (லங்கா) நிறுவனத்தின் பங்குபற்றலுடன், சகல ஒப்பந்த நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ஆழமான அறிவுப் பகிர்வு, சிறந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தலைப்புகள் பற்றிய உள்ளம்சங்களை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களை அறிமுகம் செய்யும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

80 வௌ;வேறு நிறுவனங்களின் 175க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

ஹொல்சிம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபிலிப்பே ரிச்சார்ட் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பதன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றன தொடர்பில் ஹொல்சிம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகளவு கவனம் செலுத்துகிறோம். இது போன்ற அறிவுப் பகிர்வு செயற்பாடுகள் மூலமாக, சகல துறைகளிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பதை உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வித சந்தேகங்களுமின்றி மக்கள், உலகம் மற்றும் இலாபம் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களுக்கு அமைய அமைந்துள்ளன' என்றார்.

ஹொல்சிம் சுகாதார மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கயான் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு தனி நபரினால் மேற்கொள்ள முடியாது. ஆனாலும் இன்றைய நிகழ்வில், இந்தளவு உயர் பங்குபற்றலை காணும் போது, மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. பெருமளவான பங்காளர்கள் தம்மை உண்மையில் அர்ப்பணித்துள்ளதுடன், மாற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளனர்' என்றார்.

பாதுகாப்பு என்பதை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு பெறுமதி எனும் வகையில் LafargeHolcimபின்பற்றி வருகிறது. தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலமாக பாதுகாப்பு என்பதை ஹொல்சிம், தலைமைத்துவத்தின் மூலமாகவும் பொறுப்புணர்வு ஊடாகவும் முன்னெடுத்துச் செல்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X