2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாதுகாப்பு தொடர்பாக விசேட வெற்றியைக் கொண்டாடும் லஃபார்ஜ்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஃபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம், கடந்த நான்கு வருடங்களுக்குள் எவ்விதமான விபத்துக்களும் இன்றி ஊழியர்களது உயிரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளதை கொண்டாடும் முகமாக ஹெந்தலை பெகாசஸ் ஹோட்டலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த ஊழியர்களது உயிரை பாதுகாக்கும் முகமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிறுவனத்தின் பிரதானிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு லஃபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக் மற்றும் ஹோல்சீம் நிறுவனத்தின் பிலிப் ரிஷார்ட் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த லஃபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக், லஃபார்ஜ் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமன்றி அந்த நிறுவனத்திற்கு பல்வேறு விதங்களில் ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மத்தியில் தற்போது பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த நான்கு வருடகாலத்திற்குள் எவ்வித விபத்துக்களும் இன்றி பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த வெற்றியை நேர்மையாக கொண்டாடுவதோடு அடுத்து வரும் 10 வருடங்களுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எமது நிறுவனத்தைப் போன்றே எம்முடன் இணைந்துள்ள நிறுவனங்களின் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு இந்த வெற்றிப் பயணத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக லஃபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பிரிவின் பிரதானி அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியானது பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் கூடியது எனவும் இந்த இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனைவரினதும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X