2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பொதுத்துறையின் திறன் விருத்தி செயற்பாடுகளுக்கு JICA உதவி

Gavitha   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போன்ற நாடுகளில் வினைத்திறன் வாய்ந்த பொதுத்துறையை உருவாக்குவது மற்றும் அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு திறன் விருத்தி செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார செயற்பாட்டில், வினைத்திறன் வாய்ந்த பங்காளர் எனும் வகையில், ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு (JICA), நாட்டின் பொது துறைக்கு பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்கும் முகமாக, வளங்களை கட்டியெழுப்புதல் மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஜப்பானிய மானிய உதவி என்பதன் மூலமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்பட்டு, JICA இனால் நடைமுறைப்படுத்தப்படும் இளம் திறமை வாய்ந்த மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு புகழ் பெற்ற ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

JDS திட்டத்தின் கீழ், 231 மில்லியன் யென் (சராசரியாக 318 மில்லியன் ரூபாய்) தொடர்ச்சியான நிதி உதவி வழங்கல் உடன்படிக்கையில், JICA வின் பிரதம பிரதிநிதி கியோஷி அமடா மற்றும் நிதி அமைச்சின், திறைசேரியின் செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திடவுள்ளதுடன், இந்நிகழ்வு ஜுன் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் கே.சுகனுமா மற்றும் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் JICA இடையிலான இந்த உடன்படிக்கை மூலமாக உள்நாட்டு பொதுத் துறையில் மனித வளங்கள் திறன் அபிவிருத்தி மற்றும் நிறுவனசார் கட்டியெழுப்பல் செயற்பாடுகள் போன்றன மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பரஸ்பர இணைவுகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த ஆண்டும்,JDS இன் கீழ் JICA மற்றும் ஜப்பானிய தூதுவராலயம் ஆகியவற்றின் இணை கழகத்தின் மூலமாக பொருத்தமான 15 அரசாங்க அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு, ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் இரு ஆண்டுகளுக்கு பொது கொள்கை மற்றும் நிதியியல், பொருளாதாரம் உள்ளடங்கலாக பொருளாதாரம், வணிக முகாமைத்துவம், சூழல் முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றில் முதுமானி பட்ட புலமைப்பரிசில் நிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X