2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய முகவரிகளில் யூனியன் அஷ்யூரன்ஸ்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு மேலும் சௌகர்யமான முறையில் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வத்தளை மற்றும் மஹியங்கனைக் கிளைகளை புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது. நாடு முழுவதும் முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய கிளைகளைக் கொண்டிருப்பது எனும் நிறுவனத்தின் கொள்கைக்கமைய இந்த கிளைகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மஹியங்கனைக் கிளையை ஓகஸ்ட் 23ஆம் திகதி, இல. 44ன/D, மியுகுணகம, மஹியங்கனை எனும் முகவரிக்கு இடம்மாற்றியிருந்ததுடன், வத்தளை கிளையை, ஓகஸ்ட் 25ஆம் திகதி, 520/2/1, நீர்கொழும்பு வீதி, வத்தளை எனும் முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது. இதன் மூலம் இப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இந்த பிரதேசங்களில் காணப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதுடன், இந்த வளர்ச்சியில் ஈடுபட எமக்கு வாய்ப்பளித்திருந்தது. எதிர்கால வளர்ச்சி மற்றும் கேள்விகளை அதிகரிப்பதில் பங்களிப்பை வழங்கும்' என்றார்.

வாடிக்கையாளர்களுக்கு தமது குடும்பங்கள் மற்றும் தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதுக்கு அவசியமான தீர்வுகளையும் சேவைகளையும் வழங்கும் வினைத்திறன் வாய்ந்த ஊழியர் குழுவை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் என்பது, 'நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைய இயங்கி வருவதுடன், வெளிப்படையான, சௌகர்யமான மற்றும் மதிப்புக்குரிய வகையிலான சேவைகளைத் தனது வாடிக்கையாளர்களுக்கு 28 வருட காலமாக வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X