Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 18 , பி.ப. 08:17 - 3 - {{hitsCtrl.values.hits}}
பெயார்வே தேசிய இலக்கிய விருது 2016 வெற்றியாளர்கள், 2017 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற கோலாகலமான வைபவத்தின் போது அறிவிக்கப்பட்டனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் சிரேஷ்ட கல்விமான்கள், ஆக்கபூர்வமான எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சமூகமளித்திருந்தனர். காலி இலக்கிய விழாவின் பெயார்வே மண்டபத்தில் இது நடைபெற்றது. பெயார்வே தேசிய இலக்கிய விருது விழாவுக்கும், காலி இலக்கிய விழாவுக்கும் பிரதான அனுசரணையாளராக பெயார்வே ஹோல்டிங்ஸ் அமைந்துள்ளது.
நாவல் வரிசையில் தீனா குமரகுருநாதன் எழுதிய “First Utterance” ஆங்கில மொழிப் பிரிவில் வெற்றி பெற்றதாக தெரிவு செய்யப்பட்டது. ரெனிசன் பெரேரா எழுதிய “மஹாராவணா” என்ற நூல் சிங்கள மொழிப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றது. எம்.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த” என்ற நூல் தமிழ் மொழிப் பிரிவில் முதலிடம் பெற்றது. வெளியீட்டாளர்களின் பிரயத்தனங்களையும், பங்களிப்பையும் கருத்திற் கொண்டு வெற்றி பெறும் நூல்களின் இத்தகைய ஆக்கபூர்வ நடவடிக்கையில் முக்கியப் பங்கை வகிக்கும் வெளியீட்டாளர்களும் இந்த வைபவத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கையின் மூன்று தேசிய மொழிகளில் ஆக்கபூர்வ இலக்கியப் படைப்புகளை அங்கிகரிக்கும் பெயார்வே தேசிய இலக்கிய விழா 2016, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனம் செய்யப்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்துடன் இணைந்துள்ளது.
பெயார்வே தேசிய இலக்கிய விருது விழா, 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அது, இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. முதலாவது, பலமான வாசிப்புப் பழக்கம், ஆக்கபூர்வ எழுத்தாளர்களுடன் மிக உன்னதமான இலக்கிய கலாசாரத்தை இலங்கைக் கொண்டுள்ள போதிலும், அறிமுகப்பற்றாக்குறை, நிதியுதவி ஆதரவின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இரண்டாவது, துரித ஊடக நடவடிக்கைகள் மற்றும் சுறுசுறுப்பு மிக்க இணையத்தளம் என்பன காரணமாக, சிறந்த படைப்பிற்கு அதற்குரிய அங்கிகாரம் கிடைப்பதில்லை என்பதாகும்.
26 minute ago
41 minute ago
41 minute ago
45 minute ago
thajmil Thursday, 19 April 2018 10:33 AM
Proud moment
Reply : 0 0
thakmil Thursday, 19 April 2018 10:37 AM
Its help to increase there student skills and to motivate there knowledge
Reply : 0 0
தக்மில் Thursday, 19 April 2018 10:47 AM
சிறப்பான விடயம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
41 minute ago
45 minute ago