2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஹொல்சிம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கட்டடக் கலைஞர் கல்வியகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் ஹொல்சிம் லங்கா அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது. 

இதன் பிரகாரம், ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவம் தொடர்பான செயற்பாடுகளுக்கு இலங்கை கட்டடக் கலைஞர் கல்வியகம் தனது அனுசரணையை வழங்கும்.

2015/2016 பருவ காலத்துக்கான நிகழ்வு CPD கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன், இதற்கு புகழ் பெற்ற கட்டடக் கலைஞரான கலாநிதி. நிஷான் விஜேதுங்க தலைமைத்துவம் வகிக்கவுள்ளதுடன், இந்த செயற்பாடுகளை நிபுணத்துவ செயற்பாடுகளுக்கான சபையின் தலைவர் கட்டடக் கலைஞர் ஜனக தர்மசேன மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் மேற்பார்வை செய்யவுள்ளனர். 

நிபுணத்துவ விவகாரங்களுக்கான சபையின் ஏற்பாடு செய்யப்படும் CPD நிகழ்வுகளை இலங்கை கட்டடக் கலைஞர் கல்வியகம் காலாகாலத்தில் முன்னெடுப்பதுடன், அதன் அங்கத்தவர்களின் நிபுணத்துவ அறிவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறது. 

ஹொல்சிம் லங்கா புத்தாக்கம் மற்றும் ஆப்ளிகேஷன் நிலையத்தின் தலைமை அதிகாரி துஷார பிரியதர்ஷன இந்நிகழ்வு பற்றி கருத்து தெரிவிக்கையில், 'ஹொல்சிம் நிறுவனத்தைச் சேர்ந்த நாம், தொடர்ச்சியாக எமது பங்காளர்களின் அறிவை மேம்படுத்தும் செயற்பாடுகiளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். துறையில் நிபுணத்தும் வாய்ந்தவர்களை அணுகக்கூடிய வாய்ப்பை நாம் கொண்டுள்ளோம். விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் நிபுணத்துவத்தை நாம் கொண்டுள்ளதுடன், அதற்கான தலைமைத்துவமேற்கக்கூடிய வளங்களையும் கொண்டுள்ளோம். இதன் காரணமாக நாம் அறிவு மையமாக இயங்கி வருவதுடன், எமது பங்காளர்களையும் தமது சிறந்த செயற்பாடுகளை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்' என்றார்.

கடந்த காலங்களில், ஹொல்சிம் லங்கா நிலைத்திருக்கக்கூடிய கொங்கிறீற் பாவனை தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தது.

ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் ஆப்ளிகேஷன் பிரிவு என்பது, வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த தீர்வுகளை வழங்கும் வகையில் செயலாற்றி வருகிறது. இந்த புத்தாக்க நிலையத்தின் மூலமாக வாடிக்கையாளர் அனுபவங்களை நிவர்த்தி செய்யக்கூடிய தீர்வுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X