2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பெரன்டினாவின் 1000 சிறுவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 23 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வருடாந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டத்தை புத்தளத்திலிருந்து பெரன்டினா ஆரம்பித்திருந்தது. 102 மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலை பெற்றுக் கொண்டதுடன், நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 703 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் செயற்பாட்டில் இவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மேலும், 300 க்கும் மேற்பட்ட 5ஆம் தரத்தில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விசார் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. இந்த செயற்திட்டம், சிறுவர்களின் எதிர்காலத் தொழில் அல்லது உயர் கல்விக்கான உரிமைக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.

பெரன்டினா எம்புளொய்மன்ட் சென்டர் (GTE) லிமிட்டெடின் மாவட்ட முகாமையாளர் சுபுன் தாரக இந்த நிகழ்வை வரவேற்புரையை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரன்டினா எம்புளொய்மன்ட் சென்டர் (GTE) லிமிட்டெடின் பொது முகாமையாளர் ஹேமந்த ஹரிஸ்சந்திர பெரன்டினாவினால் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கியிருந்தார். மேலும் பார்வையாளர்களுக்கு வீடியோ காட்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இதன் போது, இந்த நிகழ்ச்சித்திட்டம் பற்றிய முழுவிளக்கமும் தற்போதைய நிலைவரம் பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. புத்தளம் மாவட்டத்தின் சமாதான கல்விப் பணிப்பாளர் ஈ.ஏ.வசந்த பண்டார, 'தேசத்தின் கல்விக்கு சமூகம் எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம்' எனும் தலைப்பில் உரையாற்றியிருந்தார். இந்த நிகழ்வுக்கான அலங்கார ஏற்பாடுகள் மற்றும் நாட்டிய நர்த்தன நிகழ்வுகளை சாலியவௌ மாதிரி பாடசாலையின் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 
 
முன்பிருந்து தரம் 5 புலமைப்பரிசில் அனுகூலத்தை பெற்றுவரும் தினுக மதுஷான் தாம் பெறும் 'பிரகாசமான மாணவர் புலமைப்பரிசில்' அனுகூலம் பற்றி குறிப்பிடுகையில், தாம் பெற்றுக் கொண்ட பிரத்தியேக அனுபவங்கள் மற்றும் க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய வேளையில் எதிர்கொண்ட சவால்கள் பற்றி குறிப்பிட்டிருந்ததுடன், இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பெரன்டினா தமக்கு எவ்வாறு உதவியிருந்தது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவருக்கு பெற்றோர் இல்லை என்பதுடன், தனது பாட்டன், பாட்டியுடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரின் உணர்வுபூர்வமான உரையின் மூலமாக பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பங்குபற்றிய மாணவர்களுக்கு அவர்களின் சாதனைகளுக்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. நிகழ்வின் நன்றியுரையை பெரன்டினா மாவட்ட முகாமையாளர் எம்.ஏ.யசிர் அர்சாத் வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியை செயற்திட்ட அதிகாரி எம்.எஸ்.எஃப்; ஆஷிஃபா தொகுத்து வழங்கியிருந்தார்.

ஃபாத்திமா பாடசாலையின் உதவியின்றி இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்க முடியாது, இந்த பாடசாலையினால் நிகழ்ச்சியை முன்னெடுப்பதற்கான இடவசதி வழங்கப்பட்டிருந்ததுடன், VOICE area federation மூலமாக போக்குவரத்து, புரொஜெக்டர், ஜெனரேற்றர் மற்றும் 10000 ரூபாய் பண அனுசரணை ஆகியன வழங்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X