Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றாடலுக்கு பாதிப்பு அற்ற சிநேகபூர்வ நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கொமர்ஷல் வங்கி மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேச அங்கீகாரத்தை வென்றுள்ளன. Asian Customer Engagement Forum (ACEF) 'சிறந்த நிலையான தன்மை கொண்ட பசுமை முயற்சி' 2015ன் விருதை மும்பாயில் வைத்து கொமர்ஷல் வங்கிக்கு வழங்கியுள்ளது.
நிலைதன்மை வகைப்படுத்தலில் வழங்கப்பட்ட ஒரேயொரு விருது இதுவாகும். வாடிக்கையாளர்களை மரபு சார் வங்கி முறையில் இருந்து டிஜிட்டல் தளத்துக்கு இடம் பெயரச் செய்வதற்கான கொமர்ஷல் வங்கியின் முயற்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமே இந்த விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. நடமாடும் மற்றும் இணைய வங்கி சேவைகள், காகிதங்களின் பாவனையை குறைத்து தன்னியக்கச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கான வங்கியின் முதலீடுகள் என்பனவும் இந்த விருதுக்கான காரணங்களாகும்.
வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க இந்த விருதை வங்கியின் சார்பாகப் பெற்றுக் கொண்டார். இந்த விருதை வழங்கிய ACEF இன் ஐந்தாவது அமர்வுக்கான குழுவிலும் அவர் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். சந்தைப்படுத்தல் சிறப்பு நிலை, நிலைத்தன்மை, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, என்பனவற்றுக்கான அங்கீகார விருதுகள் ACEF ஆல் வழங்கப்படுகின்றன. 21 பேர் கொண்ட ஆலோசனை சபை இதனை வழிநடத்துகின்றது. இந்த சபை வாடிக்கையாளர் தொடர்பு விடயங்களில் மிக ஆழமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.
'இலத்திரனியல் அலைவரிசைகளை பாவிக்க எமது வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பது எமது சுற்றாடல் நலனுக்கு வழிவகுக்கும். இது வங்கியின் ஒட்டுமொத்த பூகோள நன்மையளிக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு அர்ப்பணமாகும்'என்று கூறினார் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான எஸ்.ரெங்கநாதன். 'எமது நடமாடும் வங்கி மற்றும் இணைய வங்கி சேவைகளை கட்டியெழுப்புவதில் நாம் பெரும் வெற்றி கண்டுள்ளோம். பல கிளைகளில் தன்னியக்கச் செயற்பாடு கொண்ட பண மற்றும் காசோலை வைப்பு முறைகளையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த முயற்சிகள் பசுமை செயற்பாட்டுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி 200000 த்துக்கும் அதிகமான நடமாடும் வங்கி வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இணைய வங்கி வாடிக்கையாளர்களையும் இணைத்துள்ளது. கடந்த ஆண்டில் நடமாடும் வங்கிச் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொமர்ஷல் வங்கி அதன் வார்ட் பிளேஸ் கிளையில் தன்னியக்க வங்கி நிலையம் (ABC) ஒன்றையும் நிறுவியுள்ளது. இங்கு பணம் காசோலை வைப்புக்கள் மற்றும் பணம் மீளப் பெறல் மட்டுமன்றி சேமிப்புக் கணக்கு திறத்தல், சில்லறைக் கடன் விண்ணப்பம் மற்றும் இணைய வங்கி சேவை என்பனவற்றையும் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுக்கு மேலதிகமாக வங்கி புதிய தலைமுறை தன்னியக்க பண வைப்பு முறையினையும் அறிமுகம் செய்துள்ளது. பணத்தை வைப்பில் இடுவதற்கான கடதாசி பாவனைக்கு முடிவு கட்டும் பசுமை வங்கி அலைவரிசை (GBC) பசுமை வங்கி நிகழ்ச்சி நிரலின் கீழ் ராஜகிரிய கிளையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
22 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago