Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 07 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மரணங்கள் சம்பவிப்பதில் இருதயம் தொடர்பான நோய்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த காரணியை நீக்குவதில் சிறிதளவேனும் முக்கிய பங்களிப்பை வழங்க நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்ட இலங்கையின் முன்னணி ஆடை விற்பனைத் தொடரான ஃபஷன் பக் முன்வந்திருந்தது. தனது தொடர்ச்சியான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு electrocardiogram (ECG) சாதனமொன்றை அன்பளிப்பு செய்திருந்தது.
Stanford South Asian Translational Heart Initiative மூலமாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையின் பிரகாரம், தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள் ஏனைய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் இருதய நோயினால் பாதிக்கப்படுவதற்கு நான்கு மடங்கு அதிகளவு வாய்ப்பை கொண்டுள்ளதாகவும், 50 வயதுக்கு முன்னர் இருதய கோளாறு ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்பு காணப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
ஃபஷன் பக்கின் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில், 'வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் நீண்ட காலத் தேவையாக இந்த சாதனம் அமைந்திருந்தது. இந்த தேவையை நிவர்த்தி செய்வதற்கு நாம் முன்வந்திருந்ததையிட்டு பெருமையடைகிறோம். ஒவ்வொரு நபருக்கும் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. அதற்காக பொருத்தமான வசதிகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றை பெற்றுக் கொள்வது முக்கிய தேவையாக அமைந்துள்ளது' என்றார்.
ECG சாதனம் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர். டி.எம். தர்மசேன திசாநாயக்கவிடம், சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன, அவரின் செயலாளர் ஸ்ரீலால் ஜயந்த ரோஹண ஆகியோரால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஃபஷன் பக் பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ், ஃபஷன் பக் மனித வளங்கள் அபிவிருத்தி முகாமையாளர் நாமல் ஏக்கநாயக்க மற்றும் சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர் எஸ்.எம். ஃபஹாம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் கொடிய இருதய நோயினால் சம்பவித்த இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மையப்பகுதியில் 32582 ஆக அல்லது 25.74 சதவீதமாக பதிவாகியிருந்ததென உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. வௌ;வேறு அறிக்கைகளின் பிரகாரம், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது. சிறுவர்கள் மத்தியிலும் குருதியில் அதிகளவு கொலஸ்ரோல் மற்றும் லிப்போபுரதங்கள் காணப்படுகின்றமை இரு பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக கலாநிதி. ஃபராஸ் தெரிவித்தார்.
வெவ்வேறு சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை ஃபஷன் பக் முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில் சுகாதாரத் துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மஹாரகம புற்றுநோய் வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே, கொழும்பு கண் ஆஸ்பத்திரி மற்றும் ராகம வைத்தியசாலை போன்ற அனைத்துக்கும் இந்த செயற்பாடுகள் மூலமாக அனுகூலங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அண்மையில் ராகம வைத்தியசாலைக்கு dash boards அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஃபஷன் பக்கின் பெருமளவு எதிர்பார்ப்பைப் பெற்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஒன்றாக, விருதை வென்ற சிசு திரிமக நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது. இன்று வரையில் சுமார் 20 பாடசாலைகளைச் சேர்ந்த 7000க்கும் அதிகமான மாணவர்கள் அனுகூலங்களைப் பெற்றுள்ளனர். 120 பாடசாலைகளில் 100,000 மாணவர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்;டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அண்மையில் நிறுவனம் நாடு தழுவிய ரீதியில் ஓவிய போட்டியொன்றை 'ரூ சித்தம்' எனும் தொனிப்பொருளில் தொடர்ச்சியான 5ஆவது தடவையாக முன்னெடுத்திருந்தது.
மேலும், மே/ஜேபி/விஜயகோஷா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு விளையாட்டு பகுதியொன்றையும் நிறுவனம் அண்மையில் அன்பளிப்புச் செய்திருந்தது. இந்நிகழ்வு சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 16 காட்சியறைகளை கொண்டுள்ளதுடன், இவற்றில் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், 'வாழ்க்கைக்கு புது வடிவம்' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago