Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மொபைல் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் மொபிடெல், நாட்டின் எதிர்கால தலைமுறையின் நலன் மீது தனது கவனத்தை செலுத்தி, விசேட செயற்திட்டங்கள் பலதை முன்னெடுத்து வருகிறது. இதனடிப்படையில், இம்முறை சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் இல்லங்கள் மற்றும் பதுளையில்
உள்ள சிறார்களுக்கு இதுவரை தமது வாழ்நாளில் பெற்றிராத மறக்கமுடியாத அனுபவத்தை பெற்றுக் கொடுக்க மொபிடெல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு உலக சிறுவர் தினமான 2015 ஒக்டோபர் 3 ஆம் திகதி, பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந் நிகழ்வுகளில்
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் தொடர்பான அமைச்சர் ஹரின் பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் போது அந்த சிறார்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடிய விசேட களியாட்டங்களை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், மெஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகள் போன்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேலாக, நாள் முழுவதும் பாடல்கள் இசைத்தவாறு, சிறுவர்களுக்கு பரவசத்தை வழங்கும் இசை நிகழ்ச்சியும்
மொபிடெல் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை இடம்பெறும் நிகழ்வுகளில் மற்றுமொரு விசேட அம்சமாக, அன்றைய தினம் விசேட சிறுவர் தின பாடல் ஒன்றையும் வெளியிடுவதற்கு மொபிடெல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த பாடலை வாடிக்கையாளர்கள் mTunes ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இதன் ஊடாக கிடைக்கும் வருமானத்தில், நாட்டில் குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கு கணனிகளை பெற்றுக் கொடுப்பதற்கு
மொபிடெல் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அதனூடாக தேசத்தின் சிறுவர்களுக்கு எதிர்கால சவால்களை வெற்றியீட்டுவதற்கான நவீன தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பதை மொபிடெல் நோக்காகக் கொண்டுள்ளது.
இந்த சிறுவர் தின நிகழ்ச்சி நிரலுக்கு சமாந்தரமாக, மொபிடெல் மூலமாக, பிரதேசத்தின் பாடசாலை வண்டிகளுக்கு விசேட i-Card முறை ஒன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் மூலமாக, பாடசாலைக்கு மாணவர் சென்றுள்ளதை உறுதி செய்து பெற்றோருக்கு குறுந்தகவல் மூலமாக அறிவித்தல் வழங்கப்படும். இந்த சேவையை மேலும் விஸ்தரித்து,
பாடசாலை வண்டி உரிமையாளர்களுக்கு தமது விருப்பத்துக்கிணங்க GPS தொழில்நுட்பத்துடன் கூடிய விசேட உபகரணமொன்று வண்டியில் பொருத்தப்படும். இதன் மூலமாக, பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வரும் நேர காலம் குறைத்த விடயங்களை பெற்றோருக்கு அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அதுபோலவே, பாடசாலை வண்டி பயணிக்கும் வீதி, Google Map ஊடாக பெற்றோருக்கு பார்வையிடவும் முடியும். இந்த சேவையை IOS, Andriod மற்றும் Windows போன்ற சகல சாதனங்களிலும் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய App ஒன்றின் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்' பாடசாலைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த i-Card முறை இதுவரையில் போக்குவரத்து சேவைகளுக்கும் விஸ்தரிப்பதற்கு மொபிடெல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையானது, பெற்றோருக்கு தமது பிள்ளைகள் பற்றி அதிகளவு கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நியமங்களை விஸ்தரிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுடன் காலம் தாழ்த்தாமல் கைகோர்த்துள்ளதுடன், சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சமூகத்தின் நலன் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தும் நடவடிக்கைகளையும் மொபிடெல் மேற்கொண்டு வருகிறது. இதுவரையில், முழு நாட்டையும் உள்வாங்கும் வகையில், தனது இணைய மற்றும் புரோட்பான்ட் சேவைகளை விஸ்தரிப்பதற்கு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நிலையான அபிவிருத்திக்காக தகவல் மற்றம் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தை மக்கள் மத்தியில் பெருமளவில் கொண்டு செல்வது மொபிடெலின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago