2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பதுளையில் மேலதிக கிளையை திறந்துள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி அண்மையில் பதுளை நகரில் மினிகொம் கிளையொன்றைத் திறந்துள்ளது.இலங்கையின் ஊவா மாகாணத்தின் தலைநகரான பதுளை நகரில் உள்ள கிளைக்கு மேலதிகமாகவே இந்தக் கிளை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகரித்து வரும் வாடிக்கையாளர்  தேவையை கருத்திற் கொண்டே இந்தக் கிளை திறக்கப்பட்டுள்ளது.

இல.288, கெப்பட்டிபொல வீதி ,பதுளை என்ற முகவரியில் இது அமைந்துள்ளது. ATM இயந்திரம் ஒன்றும் இங்கு பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு விதமான சேவைகளையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம். பணப் பரிமாற்றம், காசோலை மாற்றம், சகல விதமான சேமிப்புக் கணக்குகளையும் திறக்கும் வசதி நிரந்தர வைப்புக் கணக்குகள், வெளிநாட்டு நாணயக் கணக்குகள், வெளிநாட்டு காசோலைகளைக் கையாளல் உட்பட பல சேவைகளையும் இங்கு பெறலாம். 

கிழமை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை ஆறு மணி வரையும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 வரையும் விரிவான சேவைகளை வழங்கும் வகையில் இந்தக் கிளை திறந்திருக்கும்.

கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் சந்தன குணசேகர சம்பிரதாய பூர்வமாக இதனைத் திறந்து வைத்தார். அவர் வங்கிக் கிளையை நாடாவை வெட்டி திறந்து வைப்பதை படத்தில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X