2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பதிவு செய்யப்படாத பயண நிறுவனங்களால் துறைக்கு பாதிப்பு

Gavitha   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிவு செய்யப்படாத பயண ஏற்பாட்டு நிறுவனங்களால் துறைக்கும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக முன்னணி பயண ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் மட்டும் சுமார் 350க்கும் அதிகமான பதிவு செய்யப்படாத பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் காணப்படுவதுடன், சுமார் 145 ஐயுவுயு பதிவு செய்யப்பட்ட பயண ஒழுங்கு நிறுவனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றினால் பயணிகளுக்கும், பயண முகவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் அனுபவமில்லாத ஊழியர்கள் பணியாற்றுவதுடன், அவர்கள் எவ்விதமான வரிகளையும் செலுத்துவதில்லை. இதன் காரணமாக, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அந்நிறுவனங்கள் அதிகளவு இலாபமீட்டுகின்றன. இது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாதாந்தம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் ஹோட்டல் பக்கேஜ்கள் போன்றன சுமார் 2.8 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆகியன அடங்கியுள்ளன. ஆனாலும் இந்த பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் வரி செலுத்தாமையால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X