2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பருகுங்கள் - வெல்லுங்கள்: வெற்றிகரமாக நிறைவு

Gavitha   / 2016 ஜூன் 15 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்குவிக் 'பருகுங்கள் வெல்லுங்கள்' வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டம், அண்மையில், கொழும்பு 01, யோர்க் வீதி, கிரான்ட் ஒரியன்டல் ஹொட்டேலில் இடம்பெற்ற, இறுதிப் பரிசு வழங்கும் நிகழ்வுடன் நிறைவுற்றது. இதன்போது 50 அதிஷ்டசாலிகள், புதிய சிசில் இரட்டைக்கதவு குளிர்சாதனப் பெட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமான இந்த ஊக்குவிப்புத் திட்டம், மார்ச் 23ஆம் திகதி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. புதுவருட உதயத்தைக் கொண்டாடுவது இதன் முதலாவது நோக்கமாகும். எமது நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளைப் பெற்றுக்கொடுப்பது மற்றைய விடயமாகும்.

இதற்கமைய, மார்ச் 08 ஆம் திகதியும், ஏப்ரல் 08ஆம் திகதியும் இடம்பெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பரிசு வழங்கும் வைபவங்களின் போது, 50 வெற்றியாளர்கள் 50 குளிர்சாதனப் பெட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X