Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி மேற்பூச்சு வகைகள் மற்றும் பூர்த்திசெய்யும் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன், சர்வதேச வர்த்தக நாமங்களை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமான JAT ஹோல்டிங்ஸ், பரி.தோமாவின் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு தொடர்ச்சியான 3வது ஆண்டாக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரியை பல விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான JAT ஹோல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன, இந்த தொடர்ச்சியான அனுசரணை வழங்குவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இந்த அனுசரணை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில், பரி.தோமாவின் கல்லூரி காப்பாளர் வண.பிதா.மார்க் பில்லிமொரியா, பரி.தோமாவின் கல்லூரி கிரிக்கட் ஆலோசனை சபையின் தலைவர் கபில விஜேகுணவர்தன மற்றும் JAT ஹோல்டிங்ஸ் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பணிப்பாளர் சுரனி சஹாபந்து ஆகியோர் முன்னிலையில் 2015 நவம்பர் 6ஆம் திகதி குணவர்தன கைச்சாத்திட்டார்.
இந்த அனுசரணையின் பிரகாரம் கல்லூரியின் முதல் 11பேர் கொண்ட அணிக்கு மட்டும் அனுசரணை மட்டுப்படுத்தப்படாமல், சகல வயது பிரிவுகளையும் சேர்ந்த அணிகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 2015/16 பருவகாலத்தில் பரி.தோமாவின் கல்லூரி பங்கேற்கும் சகல டெஸ்ட் (2 நாள் மற்றும் 3 நாள் உள்ளடங்கலாக) மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் அனைத்துக்கும் இந்த அனுசரணை பொருந்தும்.
1993ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், நவீன, புத்தாக்கமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளை துறைக்கு JAT வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக வெற்றிகரமாக பயணிக்கும் JAT தற்போது மரத்தளபாடங்கள் மேற்பூச்சுத் துறையில் நிகரற்ற முன்னோடி எனும் நிலையை எய்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற நாமங்களான இத்தாலியின் Sayerlack Wood finishing, பிரித்தானியாவின் Crown மற்றும் Permoglaze decorative Emulsion மற்றும் Weather Coat பெயின்ட்கள், மற்றும் அமெரிக்காவின் Herman Miller Desking & Seating ஆகியவற்றை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. இலங்கையில் காணப்படும் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக JAT ஹோல்டிங்ஸ் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அனுசரணை குறித்து JAT ஹோல்டிங்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஏலியன் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'நான் பயின்ற பாடசாலைக்கு அனுசரணை வழங்க வாய்ப்பு கிடைத்தமையை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். இலங்கையில் JAT தொடர்ந்து விளையாட்டுகளுக்கு தேசிய மட்டத்திலும், பாடசாலைகள் மட்டத்திலும் அனுசரணைகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக உள்நாட்டு திறமைகளை ஊக்குவிக்கிறது. குறுகிய காலப்பகுதியில் பல சாதனைகளை எய்திய நிறுவனம் எனும் வகையில், விளையாட்டுக்களினூடாக இலங்கை தாய்க்கு உண்மையான மற்றும் முன்நோக்கி பயணிக்கும் வகையிலான பங்களிப்பை வழங்க முடிந்துள்ளது' என்றார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago