Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண் தொழில்முனைவு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மற்றுமொரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுப்பரவலுக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் இன்னொரு திட்டமாக இது அமைந்துள்ளது.
நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக அமைந்துள்ள கொமர்ஷல் வங்கி, கடந்த ஒரு மாதத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வங்கியால் நிதியளிக்கப்படும் இரண்டாவது கடன் திட்டமாக, ‘திரிஷக்தி கொவிட்-19 உதவிக் கடன்’ இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருடாந்தம் 15 மில்லியன் ரூபாய்க்கும் குறைவான புரள்வைக் கொண்டுள்ள வணிகங்களின் தொழிற்படு மூலதனத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் அவ்வணிகங்களின் செயற்பாடுகளை மீட்டெடுக்கவும் இக்கடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு, ஒன்பது சதவீதம் என்ற வருட வட்டி வீதத்தில் இக்கடன்கள் வழங்கப்படும்.
கொமர்ஷல் வங்கியின் ‘திவிசறு’ சேமிப்புக் கணக்கு உரிமையாளர்களாக இருந்து, எவ்வகையான வாழ்வாதாரச் செயற்பாட்டு வகையிலானதுமான நுண், சிறிய தொழில்முனைவோர்க ளாகவும், எந்த நிதி நிறுவனங்களுக்குமான கொடுப்பனவுகளை 2020 மார்ச் 25 க்கு முன்னர் செலுத்தத் தவறாமல் இருப்பின், ‘திரிஷக்தி’ கடன் திட்டத்தின் கீழ் கடன்களைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவர். அதேபோல், தனிநபர்களும் பதிவுசெய்யப்பட்ட வணிகங்களும் கூட தமது செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக இக்கடனைக் கோர முடியும்.
வங்கியுடன் ஏற்கெனவே நுண் நிதிக் கடன் பெற்று, அதைச் சரியாகப் பேணுவோர், நுண் வணிகங்களோடு தொடர்புடைய பெண்கள், ஏனைய வகையான நிதியியல் உதவிகளுக்குத் தகுதிபெறாத நுண் கடன் பெறுநர் ஆகியோருக்கு, ‘திரிஷக்தி கொவிட்-19 உதவிக் கடன்’ வழங்குவதற்கான முன்னுரிமை வழங்கப்படுமென வங்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago
4 hours ago