2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாற்பண்ணை விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த Pelwatte Dairy பங்களிப்பு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dairy Industries Ltd. நிறுவனத்தின் பாற்பண்ணைச் சேவைகள், விரிவாக்கப் பிரிவின் களக் குழுவால் அளிக்கப்படும் பல சமூக, ொருளாதார ரீதியாக வலுவூட்டும் நடவடிக்கைகள் மூலமாக, உள்நாட்டு பாற்பண்ணை விவசாயிகள், சிறு பண்ணை உரிமையாளர் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.  

Pelwatte Dairy Industries நிறுவனமானது. நாடுபூராவும் உள்ள, தனது பால் சேகரிப்பு நிலையங்கள் ஊடாக, பாற்பண்ணை விவசாயிகளுக்குப் போட்டித்தன்மையான விலையை வழங்குவதன் மூலம், அவர்களது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்துள்ளது. 

தற்போது, இந்தப் பாரிய பாற்பண்ணை நிறுவனமானது சுமார் 10,000 இற்கும் அதிகமான பாற்பண்ணை விவசாயிகளிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்வதுடன், இந்த வலையமைப்பு தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. Pelwatte Dairy Industries, உள்நாட்டு பாற்பண்ணைத் துறையை ஊக்குவிப்பதையும் பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்குவதையும் உறுதிப்படுத்துகிறது. 

பாற்பண்ணை விவசாயிகளுக்கு பாற்பண்ணைச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி, மற்றும் அறிவுப் பரிமாற்றல் Pelwatte Dairy Industries நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு முக்கிய அம்சமாகும். தீவன புல் பயிர்ச்செய்கை, தீவனங்கள் தொடர்பான அறிவூட்டல் இதில் அடங்கும்.

பால் கறக்கும் பசுக்களுக்கு ஒரு சீரான உயர் போஷனை கொண்ட உணவை வழங்குவதில், இந்தக் காரணிகள் பற்றிய அறிவும் புரிதலும் அவசியம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது பசுவிலிருந்து கறக்கப்படும் பாலின் அளவை மேம்படுத்துவதுடன், உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். 

Pelwatte Dairy Industries, புத்தலவில் உள்ள தங்கள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பண்ணையில், சீரான பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. உள்ளகப் பயிற்சியின் போது, விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் வழங்குகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X