Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
JXG (ஜனசக்தி குழுமம்), நற்குண முன்னேற்ற அமைப்புடன் கைகோர்த்து, மொனராகலை கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையத்தினூடாக, பின்தங்கிய சமூகத்தாருக்கு நிலைத்திருக்கும் அபிவிருத்திப் பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.
நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கு கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையங்களினூடான சென்றடைவை நற்குண முன்னேற்ற அமைப்பு மேற்கொண்டுள்ளதுடன், வசதி வாய்ப்புகள் குறைந்த சமூகங்களில் உயர் தரம் வாய்ந்த வசதி வாய்ப்புகள், திறன் விருத்தி மற்றும் பரந்த கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பலம் பொருந்திய மாதிரியாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்தினதும் முக்கியத்தும் வாய்ந்த நிலையமாக இவை அமைந்திருப்பதுடன், சுய-வலுவூட்டல், சமத்துவமின்மையை குறைத்தல் மற்றும் ஒட்டு மொத்த வாழிட நியமங்களை மேம்படுத்தல் போன்றவற்றுக்கு அவசியமான நிகழ்ச்சித் திட்டங்களை அணுகுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன.
2025 ஜுன் மாதத்தில் மொனராகலை கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையத்தினால், 1233 அனுகூலம் பெறுவோருக்கு ஆதரவளிக்கப்பட்டிருந்ததுடன், 282 புதிய பதிவுகளை உள்வாங்கியிருந்தது. 15 பாடவிதான-அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து, இந்தத் திட்டத்தின் உடனடி தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, 2025 ஜுலை மாதத்தில், 260 பதிவு செய்யப்பட்ட மாணவர்களை ஈடுபடுத்தியிருந்ததுடன், 15 பாடங்களில் 1168 கற்கைநெறி அனுகூலம் பெறுவோரை சென்றடைந்திருந்தது. மொத்தமாக 29 கிராமங்களின் 17 பாடசாலைகள் பயன் பெற்றிருந்தன. இதில் 87 ஆண் மற்றும் 170 பெண் பதிவு செய்யப்பட்ட மாணவர்களாக காணப்பட்டதுடன், கற்கைநெறி பங்கேற்பில் 423 ஆண் மற்றும் 745 பெண் பயிலுனர்களும் அடங்கியிருந்தனர். கணனி பயிற்சி, ஆங்கில மற்றும் தமிழ் மொழி, அடிப்படைக் கல்வி, ஆடை வடிவமைப்பு, சமையல், STEAM, புவிசார் சுகாதாரக் கல்வி, நற்குண விவசாயத் திட்டம், பாரம்பரிய இலங்கையின் நடனம், சிறுவர்களின் சிறந்த பெறுமதிகள் திட்டம், Stray Friendly நடவடிக்கை மற்றும் வயது முதிர்ந்தோருக்கான சிறந்த பராமரிப்பு போன்றன கிராமிய மக்களை மேம்படுத்தி வலுவூட்டுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தது.
இந்தப் பங்காண்மை தொடர்பில் JXG (ஜனசக்தி குழுமம்) இன் முகாமைத்துவ பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஷாப்ட்டர் கருத்துத் தெரிவிக்கையில், “கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையங்களினூடாக இலங்கையின் பின்தங்கிய கிராமிய சமூகத்தாரின் வாழ்வை மாற்றியமைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நற்குண முன்னேற்ற அமைப்புடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். வாழ்வை மேம்படுத்தல் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டல் போன்றவற்றில் கவனம் செலுத்தும், JXG (ஜனசக்தி குழுமம்) இன் சமூக நலன்பேண பிரிவான ஜனசக்தி அறக்கட்டளையின் இயற்கையான நீடிப்பாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. இலங்கையில் நிலைபேறான, அளவிடக்கூடிய மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்புகளுக்கு ஆதரவளிப்பது எனும் எமது நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது. ஜனசக்தி அறக்கட்டளையினூடாக, நாம் சேவையாற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம். தேசிய முன்னுரிமைகளில் எமது நோக்கினூடாக, தேசத்தில் வளர்ச்சியை பதிவு செய்ய எமக்கு உதவியுள்ளதுடன், காலப்போக்கில் சமூகங்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தவும் முடிந்துள்ளது.” என்றார்.
நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் பிரதம காப்பாளர் குஷில் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “நகர-கிராமிய பாகுபாட்டை இல்லாமல் செய்து, சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது நற்குண முன்னேற்ற அமைப்பைச் சேர்ந்த எமது நோக்காக அமைந்துள்ளது. மொனராகலை கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையத்திற்கு JXG (ஜனசக்தி குழுமம்) ஆதரவளித்திருந்ததனூடாக, நோக்குகளை அடிப்படையாகக் கொண்ட பங்காண்மைகளினூடாக எவ்வாறு வாழ்வை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து, உலகத் தரம் வாய்ந்த வசதிகள், வாழ்வை-மாற்றியமைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நிலைபேறான வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தி, பின்தங்கிய சமூகங்களுக்கு நிலைபேறான வகையில் வலுவூட்டும் வாய்ப்புகளை உருவாக்கி, இலங்கை முழுவதிலும் நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago