2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி போதனை பயிற்றுவிப்பு மாநாடு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்காவால், ஆங்கில மொழி போதனை தொடர்பான பயிற்றுவிப்பு மாநாடு (SLELTEC) 2020 அண்மையில் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள ஆங்கில மொழி ஆசிரியர்களின் சாதனைகளை வெளிக் கொணரும் வகையிலும், உள்நாட்டிலும் பிராந்திய மட்டத்திலும் காணப்படும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்கள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் துல்ஹிரிய MAS Athena இல் இடம்பெற்ற இந்த மாநாட்டில், அரச துறையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகளின், ஆசிரிய பயிற்சி கல்லூரிகள் மற்றும் ஆசிரிய நிலையங்கள், பிராந்திய ஆங்கில உதவி நிலையங்கள் போன்றவற்றின் விரிவுரையாளர்கள் மற்றும் மாகாண மட்டத்திலுள்ள சேவையிலுள்ள ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பிராந்திய ரீதியில் கலந்து கொண்டவர்களில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பிரிவின் பணிப்பாளர் மஹேஷி வீரசூரிய, பிரதி பணிப்பாளர் சனத் ஜயலத், தேசிய கல்வி நிறுவனத்தின் ஆங்கில பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. தர்ஷன சமரவீர, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தலைவர்கள், மாகாண ஆங்கில ஒழுங்கிணைப்பாளர்கள், பிராந்திய ஆங்கில உதவி நிலையங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் தொனிப் பொருள் “21ஆம் நூற்றாண்டின் ஆங்கில மொழி ஆசிரியர் கல்வி” என அமைந்திருந்தது. ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவுவதற்கு பிரயோகிக்கப்பட வேண்டிய நுட்பங்கள், சாதனங்கள் மற்றும் முறைகள் போன்றன தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தன.

இலங்கையின் அரச துறையைச் சேர்ந்த சேவையிலுள்ள ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுடன் பிரிட்டிஷ் கவுன்சில் முன்னெடுக்கும் பணிகள் பற்றியும் இந்த ஆசிரியர் பயிற்றுவிப்பு மாநாட்டின் போது பேசப்பட்டிருந்தன.

ஆங்கில ஆசிரியர்களுக்காக இலங்கை ஆங்கில மொழி ஆசிரிய சம்மேளனத்தினால் (SLELTA) பல மாநாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கு எதுவும் முன்னெடுக்கப்படுவதில்லை.

எனவே, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை இன்றியமையாத தேவையாக அமைந்திருந்ததுடன், உள்நாட்டு சேவையிலுள்ள ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கு பயனளிப்பதாக அமைந்திருந்தது. உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் காணப்படும் திட்டசாரா ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களினால் முன்னெடுக்கப்படும் பணிகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்நிகழ்வு வழங்கியிருந்தது.

 

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சினால் இணைந்து முன்னெடுக்கப்படும் அமைப்பான Community of Practice (COP) இனால் நான் உப தொனிப்பொருட்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இலங்கையின் ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளர்களுக்கு விசேடமான வகையில் மாநாடு அமைந்திருந்தது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்த தொனிப்பொருட்களினூடாக, Community of Practice இன் ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கு முக்கியமான சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஆங்கில மொழி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டிருந்தன.

இந்த மாநாட்டின் பிரதான தகவல்களில் டிஜிட்டல் போக்குகள் பற்றிய விடயங்கள் உள்ளடங்கியிருந்தன. குறிப்பாக தொழில்நுட்பம் ஆங்கில மொழி கற்பித்தலில் அதிகளவு தாக்கம் செலுத்துகின்றமை பற்றி உரையாடப்பட்டிருந்தது. கண்காணிப்பு மற்றும் கருத்தளிப்பு ஆகியவற்றுடன் நேருக்கு நேரான கண்காணிப்பு மற்றும் கருத்தளிப்பு ஆகியன கல்வியின் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கம் செலுத்தும் அம்சங்களாக இனங்காணப்பட்டிருந்தன.

இலக்கியம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி ஆங்கில மொழி ஆசிரியர்கள் வகுப்பறையில் பயிற்றுவிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இறுதியாக பேச்சு மற்றும் செவிமடுத்தல் தொடர்பில் இலங்கையில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும் போது காணப்படும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், பணியிடங்களுக்கு புதிதாக இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கு இந்த திறன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளதுடன், அவற்றை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்பட்டிருந்தது.

இந்த மாநாடு தொடர்பில் பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை ஆங்கில மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பு மாநாடு (SLELTEC) 2020 என்பது அதிகளவு வரவேற்கத்தக்கது. இந்த பங்கேற்கச் செய்யும் அமர்வுகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் பரந்த நிகழ்ச்சிகளினூடாக பங்குபற்றியிருந்தவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பயிலும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியிருந்தது” என்றார்.

கல்வி அமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் பிரதி பணிப்பாளர் சனத் ஜயலத் கருத்துத் தெரிவிக்கையில், “ஆசிரியர் பயிற்றுவிப்பு மாநாடு கல்வி அமைச்சு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. பங்குபற்றுநர்களுக்கு கற்பித்தலில் காணப்படும் பிந்திய பிரயோக முறைகள் பற்றிய விளக்கங்களை வழங்குவதாக அமைந்திருந்தது. இதில் பிரயோக சிந்தனைகள், மூலோபாயங்கள் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்திக்கான வசதிகள் மற்றும் பொதுவான சவால்களை நிவர்த்தி செய்வது பற்றிய விளக்கங்கள் போன்றன அடங்கியிருந்தன. துறையில் காணப்படும் முன்னணி நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள பங்குபற்றுநர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X