2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் எல்பிட்டிய கிளை புதிய முகவரிக்கு மாற்றம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னிலையில் திகழும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய, சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், தனது எல்பிட்டிய கிளையைப் புதிய முகவரியில் திறந்து வைத்தது. 

புதிய முகவரிக்கு மாற்றப்பட்ட எல்பிட்டிய கிளையை (இல. 15, அம்பலாங்கொட வீதி, எல்பிட்டிய) பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் திறந்து வைத்தார்.

வேகமாக வளர்ந்த வரும் நகரங்களில் ஒன்றாக எல்பிட்டிய அமைந்துள்ளதுடன், ஆரம்ப நிலை வியாபாரங்கள் பல காணப்படுவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. எனவே, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு விஜயம் செய்து நிதிச் சேவைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில், எல்பிட்டிய கிளையை பீப்பள்ஸ் லீசிங் புதிய முகவரிக்கு மாற்றியிருந்தது.

இந்தக் கிளையின் திறப்பு விழாவில், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க, சந்தைப்படுத்தல் - பிரதி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன, செயற்பாடுகளுக்கான பிரதம முகாமையாளர் ஹசந்த டி சில்வா மற்றும் எல்பிட்டிய கிளை முகாமையாளர் சம்பத் ஹேவாவசம் மற்றும் பெருமளவான பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .