2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மெகாபொலிஸ் திட்டத்தினால் தொழில் வாய்ப்புகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெகாபொலிஸ் திட்டத்தின் மூலமாக பெருமளவு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக TNS லங்காவினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பின் மூலமாக தெரியவந்துள்ளது.  

இந்த பெறுபேறுகளின் பிரகாரம் 61சதவீதமானவர்கள் மெகாபொலிஸ் திட்டத்தின் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கருத்துத்தெரிவித்துள்ளனர். 24 சதவீதமானவர்கள் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளனர்.  

மெகாபொலிஸ் திட்டத்தின் மூலமாக புதிய வியாபாரங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதனூடாக இந்த புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.  
LMD சஞ்சிகையுடன் இணைந்து மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த கருத்துக்கணிப்பின் போது வெளிநாட்டு முதலீடுகள், ஒன்றிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள், இந்த திட்டத்தின் தேவை போன்ற விடயங்கள் குறித்தும் கருத்துக்கோரப்பட்டிருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X