Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமையில் 2015 ஆண்டிற்கான சிறந்த பங்குதாரர்களுக்கான விருது வழங்கும் வைபவம் பத்தரமுல்லை Waters Edgeஇல் அண்மையில் இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த நிகழ்வின் ஊடாக மைக்ரோசொவ்ட் நிறுவனம் தமது பங்குதாரர்களை ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்து அவர்களது ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கௌரவிப்பதே முக்கிய நோக்கமாகும்.
2004ஆம் ஆண்டில் இலங்கைக்கு பிரவேசித்த மைக்ரோசொவ்ட் நிறுவனம் அன்று முதல் சிறிய மற்றும் பெரிய அனைத்து வர்த்தகர்களுக்கு மட்டுமன்றி தனிப்பட்ட பயனாளிகளுக்கும் தகவல் தொழில்நுட்பத்தை வித்தியாசமான விதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முறை பங்குதாரர்களது விருது வழங்கும் நிகழ்வின் விசேட அம்சமானது நிறுவனத்தினால் Office 2016ஐ இலங்கையில் இருந்து வெளியிட்டதன் ஊடாக உலகம் முழுவதிற்கும் வெளியிட்டு வைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. அத்துடன், கடந்த ஜூலை மாதம் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் Windows 10ஐயும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் மைக்ரோசொவ்டுடன் இணைந்து செயற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் பல்வேறு துறைகளுக்காக விருதுகளை வென்றெடுத்தன. சிறந்த Office 365 பங்குதார வியாபார ஸ்தாபனத்திற்கான விருதினை H-One நிறுவனமும் சிறிய மற்றும் நடுத்தர Office 365 பங்குதார நிறுவனத்திற்கான விருதினை ZILLIONe Technologies நிறுவனம் வென்றன. மேலும் ZILLIONe ஆண்டின் சிறந்த பெரிய கணக்கு மறுவிற்பனைக்கான விருதினையும் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் MS Technologies ஆண்டின் சிறந்த நிர்வகிக்கப்பட்ட பங்குதாரர் மற்றும் சிறந்த பொதுத்துறை பங்குதாரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றெது. Tech One Global நிறுவனம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்தர் மற்றும் 'இணைக்கப்பட்ட மூலம்' COEM விநியோகிப்பாளர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றெடுத்தது. 'இணைக்கப்பட்ட மூலம்' பெயரிடப்பட்ட பங்குதாரர் என்ற விருது E-wis நிறுவனத்திற்கும் சிறந்த 'இணைக்கப்பட்ட மூலம்' COEM மற்றும் FPP பங்குதாரருக்கான விருதினை Barclays Computers நிறுவனமும் பெற்றுக் கொண்டது. சிறந்த கல்விப் பங்குதாரருக்கான விருதினை E-W Information Systems நிறுவனம் வென்றது. ஆண்டின் சிறந்த மறுவிற்பனைக்கான விருதினை Softlogic உம் ஆண்டின் சிறந்த ISV பங்குதாரர்களுக்கான விருதினை IronOne Technologies உம் வென்றது. Enhanzer ஆரம்ப தீர்வு/ மென்பொருளுக்கான விருதினை வென்றதோடு, ஆண்டின் சிறந்த இயக்க பங்குதாரருக்கான விருதினை Jinasena Infotech வென்றெடுத்தது. மாலைத்தீவுக்கான சிறந்த விருதினை Maxcom Technologies வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது இரண்டு விசேட விருதுகளை மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் வழங்கியது. மைக்ரோசொவ்ட் உலகளாவிய பங்குதாரர்களுக்கான கூட்டத்தின் போது Millennium Information Technologies (Pvt) Ltd நிறுவனம் உள்நாட்டு சிறந்த பங்குதாரருக்கான விசேட விருதினையும் இந்த ஆண்டுக்கான சிறந்த Azure தீர்வுக்கான பங்குதாரருக்கான விருதினையும் வென்றதோடு N-ABLE (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஆண்டின் சிறந்த நிறுவன நகர்வுத்திறன் தொகுதித் தீர்வுக்கான விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிட முகாமையாளர் பிரயன் கெலி கருத்து தெரிவிக்கையில், மைக்ரோசொவ்டின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மைக்ரோசொவ்ட் பங்குதார நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மைக்ரோசொவ்ட் மற்றும் அதன் சுற்றுச் சூழல் கட்டமைப்புடன் இணைந்து சந்தையில் எவ்வித மாற்றத்தையும் செய்யாத ஒரேயொரு விடயம் எனக் கூறப்படுவது இதுவரை பங்குதாரர்களுடன் ஒன்றாக இணைந்து சந்தையில் பிரவேசிப்பதே ஆகும். இந்த வெற்றிக்கு காரணம் மைக்ரோசொவ்ட் என்பது முழு உடலில் இருப்பதோடு, அதனூடாக எதிர்காலத்தில் அனைவருக்கும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முடிவதுடன் சிறந்ததொரு உறவு மற்றும் அனுபவமிக்க புதிய உற்பத்தி சாதனங்களின் ஊடாக பாவனையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும்.' என அவர் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago